Thursday, October 31, 2013

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 1

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 1

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

குறுக்காக:
5.கருநாகம் தீய்ந்துபோக விட்டது நாங்கள்தான் (2)
6.கெட்டியான அல்வாவாகிரு. கரைந்தால் பக்கத்‌தில் கூப்பிடு (1,4,1)
7.தெருப்புறம் ஓரங்களில் காய்வது கேட்கும் திறனற்ற சாமி (4)
8.கலங்கிய அனைவரின் வரிவிலக்கு பெற்றவள் (3)
10.பசு கடவுள் என எண்ணும் ஆள் (3)
12.கனிப்பொருளை இழந்து கலங்கிய சீதாவை கவராது கவர்பவனா? (4)
15.மணிக்(க/கா)ட்டு ஒலி (2,2,2)
16.சவாலில் ராமனால் வஞ்சிக்கப்பட்டவன் (2)

நெடுக்காக:
1.இருபக்கமும் பணம் பாழாய் போகும் நகரம் (4)
2.மாலை மலரா மாறி மலரானது (5)
3.ஆறுதலை தரும் இறைவா (3)
4.அர்ஜுனனுக்கு எதிரி? (4)
9.பாழடைந்தாலும் சிறை வசதிக்கு குறையில்லை என்றாள் பார்வதி (5)
11.நட்சத்திரம் இழந்த சாதாரணக் கையா ராஜகுரு? (4)
13.பாதியில் மங்கள வீணை மீட்டுபவள் ஒரு திருடி? (4)
14.கேள்வி வளையம் (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

 

Wednesday, October 23, 2013

மலர் - 1


1931-ம் ஆண்டு வெளிவந்த "காளிதாஸ்" தமிழ் திரைப்படத்தை தொடர்ந்து, இதுநாள்வரை  6000 க்கும் அதிகமான  தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மேலும் ஒவ்வொரு ஆண்டும்  100 க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வேற்று மொழியில் தயாரிக்கப்பட்டு  தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்கள் இந்த பட்டியலில் சேராது.  
 
50 வருடங்களுக்கு முன்பு சில திரைப்படங்களுக்கு இரண்டு தலைப்புகள் வைத்திருந்தனர். உதாரணமாக எம்.ஜி.ஆர். நடித்து 1941ம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்திற்கு வேதவதி அல்லது சீதா ஜனனம் என்று தலைப்புகள் வைத்திருந்தார்கள். ஆனால்  பிற்காலத்தில் இதுமாதிரியான இரண்டு தலைப்புகள் வைப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.
 
ஆனால் அக்காலம் முதல் இன்றுவரை  பல தமிழ்  திரைப்படங்களுக்கு  ஏற்கனவே வெளிவந்த திரைப்படத்தின் பெயரையே திரும்பவும்  வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் திரைப்படத் தலைப்புகளுக்கு பஞ்சமாகி விட்டது போலும்.
 
இது போதாதென்று ஒரே தலைப்பைக் கொண்டு இரண்டு அல்லது மூன்று தயாரிப்பாளர்கள் (ஒருவருக்கொருவர் அறியாமல்) திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். பிறகு விஷயம் தெரிந்தபின் வழக்கு, சமரசம் என்று போய் ஒருவழியாக  சமாதானம் ஆகி, ஒரு தயாரிப்பாளர்  திரைப்படத் தலைப்பை மாற்றிவிடுவார். 
 
முன்பாக சில  தமிழ் திரைப்படங்களுக்கு வேற்று மொழி சொற்களை  (குறிப்பாக ஆங்கில சொற்களை) வைத்திருந்தனர்.  கடந்த கலைஞர் ஆட்சியில்  தமிழில் தயாரிக்கப்பட்டு தமிழ் சொற்களையே தலைப்புகளாக வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு  அளிப்பதாக அரசாணை வெளியிடப்பட்ட பின்னர், வரிவிலக்கு பெறுவதற்காகவே   தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ் சொற்களையே தலைப்பாக வைத்துவந்தனர்.  ஆனால் தற்போது  திரும்பவும் வேற்றுமொழிச் சொற்களை தமிழ் திரைப்படங்களுக்கு தலைப்பாக வைப்பது தொடங்கிவிட்டது வேதனைக்குரிய விஷயம். (உதாரணம்:  பீட்சா, வில்லா, ஜில்லா, பிரியாணி, ரம்மி, டீல், பென்சில் போன்றவை).

சில தயாரிப்பாளர்கள் புது திரைப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே, படப்பிடிப்பை தொடங்கி விடுகிறார்கள். சமீபத்தில் அஜீத் நடித்து முடித்துள்ள ஆரம்பம் திரைப்படத்திற்கு தலைப்பை படப்பிடிப்புகள் முடிந்தபின்னர்தான் வைத்தார்கள்.

சில தயாரிப்பாளர்கள் ஒரு தலைப்பை வைத்து படப்பிடிப்பை தொடங்கிவிடுகிறார்கள். பிறகு நடுவில் தலைப்பை மாற்றிவிடுகிறார்கள்.  உதாரணமாக சமீபத்தில் வெளிவந்த நய்யாண்டி திரைப்படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு - சொட்ட வாள குட்டி.

இப்படியாக திரைப்படத்திற்கு தலைப்பு வைப்பதில் பல முறைகளும், சிக்கல்களும் இருந்து வந்துள்ளன / வருகின்றன.


ஓரெழுத்து திரைப்படங்கள் :

முதன் முதலில் தமிழில் ஓரெழுத்தை தலைப்பாகக் கொண்டு வெளிவந்த திரைப்படம்:  நீ.  1965ல்  இந்த திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா நடித்திருந்தனர். இதன்பின் தமிழில்  ஓரெழுத்தைக்கொண்டு  சில  திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.  இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.  

ஓரெழுத்து தலைப்புடைய திரைப்படங்களின் பட்டியல்: (தலைப்பும், வெளிவந்த ஆண்டும்)


1.     நீ             (1965)
2.     தீ             (1981)
3.     ஜி           (2005)
4.     ஈ             (2006)
5.     லீ            (2007)
6.     ஃ             (2008)
7.     பூ            (2008)
8.     க            (2009)
9.     தீ            (2009)
10.   மா         (2010)
11.   வ           (2010)
12.   தா          (2010)
13.   கோ       (2011)
14.   டூ            (2011)
15.   மை       (2012)
16.   கை        (2012)

படப்பிடிப்பில் இருப்பவை:

1.   உ
2.   ஐ

ஒரு எண் கொண்ட திரைப்படங்களின் பட்டியல்:

1.    3              (2012)
2.    4              (2013)
3.    6              (2013)

அதிக தமிழ் எழுத்துக்களை கொண்ட திரைப்படம்:

இதுவரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களிலேயே, அதிக எழுத்துக்களை (மிக நீளமான) தலைப்பைக் கொண்ட திரைப்படம்:  

ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் 

மன்சூர் அலி கான் கதாநாயகனாக நடித்து 1993ம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் தலைப்பு மொத்தம்  42  தமிழ் எழுத்துக்களைக் கொண்டது.

இப்போது இந்த மலர் - 1 க்கான  கேள்வி:

அடுத்து அதிக எழுத்துக்களை தலைப்பாகக்   கொண்டு  தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படம்  எது? / திரைப்படங்கள் யாவை?
 

விடையை பின்னூட்டம் மூலமாக  28.10.2013 க்குள் அனுப்புங்கள்.


ராமராவ் 
 
 
 
    

Wednesday, October 16, 2013

திரைக்கதம்பம் - முன்னோட்டம்

வணக்கம் நண்பர்களே,
 
"திரைஜாலம்" வலைப்பிரிவில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக  கீழ்க்கண்ட புதிர்களை வழங்கி வருகிறேன். 

1. சொல் வரிசை
2. எழுத்துப் படிகள்
3. எழுத்து வரிசை
4. எழுத்து அந்தாதி
5. சொல் அந்தாதி  

இந்த புதிர்களில் பங்கேற்று பல நண்பர்கள் ஆதரவு அளித்து வருவதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் நண்பர்கள் பெருமளவில் இந்த புதிர்களில் பங்கேற்று மென்மேலும் என்னை  ஊக்குவிப்பீர்கள் என நம்புகிறேன்.

இதே வேளையில்  திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைப்படக் கலைஞர்கள்   பற்றிய வேறுவிதமான கேள்விகளையும் புதிர்களையும் அறிமுகப்படுத்துவதற்காக  மற்றொரு வலைப்பிரிவு "திரைக்கதம்பம்" என்ற தலைப்பில் தொடங்கியிருக்கிறேன்.
 
திரைக்கதம்பத்தில், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைப்படக் கலைஞர்கள் பற்றிய பல அரிய விஷயங்கள், தொகுப்புகள் இடம் பெறும். நண்பர்கள் பங்கேற்கும் வகையில், ஒவ்வொரு பதிப்பிலும் கேள்விகள் இடம்பெறும்.
 
மேலும், திரைக்கதம்பத்தில் திரை குறுக்கெழுத்துப் புதிர்களும் இடம் பெறும். திரை குறுக்கெழுத்துப் புதிர்கள், திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள், திரைக்கலைஞர்கள் பற்றியதாக  இருந்தாலும், அவற்றைப்பற்றி  நன்கு அறியாதவர்கள் கூட பங்கேற்கும் வகையில்  இந்தப் புதிர்கள் அமைந்திருக்கும். .
 
நண்பர்கள் திரைக்கதம்பம் வலைப்பிரிவிலும் "Followers"ல் Click செய்து  இணைந்து, பெருமளவில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். நண்பர்கள் திரைக்கதம்பம் பற்றிய கருத்துக்களை பின்னூட்டம் (Comments) மூலமாக அனுப்பலாம்.
 
திரைக்கதம்பம் பதிப்புகள் விரைவில் தொடங்கும்.

நன்றியுடன்,

ராமராவ்