Wednesday, January 8, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 4


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 4

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.


குறுக்காக:
3. இளவரசியும் மன்னன் மகள் (5)
6. மலையுச்சி அடைந்த மனிதன் இறங்கினால் ரசிகனின் மதம் மாறும் (4)
7. விருப்பமின்றி புகை பிடிப்பவன் எப்படியும் நண்பன் ஆகமாட்டான் (4)
8. மீண்டும் தேறுபவன் ஆண்டவன் கைவிட்டால் இறக்கும் நிலையில் இருப்பான் (6)
13. ஆறாவது ராசிக்காரி மணமாகாத மங்கை (6)
14. மரியாதைக்குரியவன் பல இடையூறுகளைக் களைந்தாலும் சாகமாட்டான் (4)
15. சம்பாத்யம் குறைந்தது உண்மைதான் (4)
16. பணிப்பெண் காவேரி சிலைக் கையை உடைத்ததால் தலைமுடியை இழந்தாள் (5)

நெடுக்காக:
1. பரமசிவம் ஒரு குற்றம் குறையற்ற மாணிக்கம் (5)
2. மாலையில் காய்ந்த நீலாம்பரி தொடுப்பதின் தொடக்கம் (4)
4. பங்கஜம் பம்பரமாய் சுழன்றதில் வீண் பெருமை கொண்டாள்
5. கற்பவன் கண்ணன் மாவடு பார்த்து விட்டால் கலக்கிடுவான் (4)
9. யுத்தத்தின் ஆரம்பத்தில் சிறிது வன்முறையை கையாண்ட இளைஞன் (3)
10. பிராமணப்பெண் குழந்தை ஆத்திரத்தில் மாலையில் வரவில்லை (5)
11. விழி பரிமாணம் குறைந்ததால் கலங்கினாள் பாரதியின் காதலி (5)
12. குழிவிழும் குமரி எழிலை குலைத்தால் கொடுந்தீ கொப்பளிக்கும் (4)
13. பெண்ணை ஒருவனுக்கு கட்டிக் கொடுக்கும் தானம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

13 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " அருமையான சொல் விளையாட்டுகள்! விடைகள் கண்டுபிடிப்பது எளிதாக இருந்தாலும், மிகவும் சுவைக்கும்படியான குறிப்புகள்! "

    "உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி." - ராமராவ்


    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர் அவர்களது கருத்து:

    " Clues are wonderful as usual but seems to be a little easy this time. Keep up the good work and waiting for the next one."

    "உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி." - ராமராவ்

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு அவர்களது கருத்து:

    "இந்தமுறை இன்னுமே நன்றாக இருந்தது. பாராட்டுகள்"

    "உங்களது பாராட்டுகளுக்கு நன்றி." - ராமராவ் .

    ReplyDelete
  4. திரு R. வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    "paNippeN pallai udaiththuvittaaL "

    ReplyDelete
  5. திரு வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்துக்கள்:

    "எல்லா குறிப்புகளுமே வெகு அருமை. புதிர் அமைப்பதில் தங்களின் உழைப்பும், முயற்சியும் பாராட்டுக்கு உரியன. பணி தொடர வாழ்த்துக்கள்."

    "தங்களது பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி" - ராமராவ்

    ReplyDelete
  6. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிக நன்றாக இருந்தது "

    ReplyDelete
  7. திரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்துகள்:

    "Another excellent crossword. Among the English crosswords I most enjoy solving are The Sunday Hindu and daily Economic Times. I can say with certainty that yours rank with them. As I had very little formal training in Tamil. I can never hope to get the nuances that Vanchi and you seem to achieve effortlessly. I think you should start non-thematic crosswords also. Congrats again.

    பிடித்த குறிப்புகள்
    குறுக்காக:
    7. விருப்பமின்றி புகை பிடிப்பவன் எப்படியும் நண்பன் ஆகமாட்டான் (4)
    நெடுக்காக:
    2. மாலையில் காய்ந்த நீலாம்பரி தொடுப்பதின் தொடக்கம் (4)
    5. கற்பவன் கண்ணன் மாவடு பார்த்து விட்டால் கலக்கிடுவான் (4)
    11. விழி பரிமாணம் குறைந்ததால் கலங்கினாள் பாரதியின் காதலி (5)
    10. பிராமணப்பெண் குழந்தை ஆத்திரத்தில் மாலையில் வரவில்லை (5)

    என்னை கொஞ்சம் குழப்பும் குறிப்பு
    8. மீண்டும் தேறுபவன் ஆண்டவன் கைவிட்டால் இறக்கும் நிலையில் இருப்பான் (6) "

    " உங்களது கருத்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
    நீங்களும், திரு முத்து அவர்களும் ஏற்கனவே, non-thematic crosswords வெளியிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஆகையால் நான்
    செய்வதை வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்ததால் இந்த திரை குறுக்கெழுத்துப் புதிரை உருவாக்கி வெளியிட்டு வருகிறேன்.

    நீங்கள் எனது திரைஜாலம் புதிர்களைப் பார்த்தால், தெரிந்துகொள்வீர்கள். அந்த மாதிரி புதிர்கள் இதுவரை யாரும் வெளியிட்டதில்லை. நான் தொடர்ந்து 15 மாதங்களாக திரைஜாலம் புதிர்களை வெளியிட்டு வருகிறேன். இந்த மாதிரி திரைஜாலம் புதிர்கள் வெளியிட திரைப்படங்கள், திரைப்படப் பாடல்கள் பற்றிய ஞானம் இருந்தால் ஒழிய புதிர்களை உருவாக முடியாது.

    ஆகையால் வித்தியாசமாக செய்ய நினைக்கிறேன்.

    Anyway, I will consider your suggestions at a later time, when I get exhausted with the திரை குறுக்கெழுத்துப் புதிர். "

    ------------ ராமராவ்

    ReplyDelete
  8. K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " thanks for giving us an interesting puthir "

    " மிக்க நன்றி. " - ராமராவ்

    ReplyDelete
  9. ஸ்ரீதரன் அவர்களது கருத்து,

    "Migavum nanraga irunthathu. ungal uthavi matrum urchagamum than intha vidaikalin porul."

    மிக்க நன்றி - ராமராவ்

    ReplyDelete
  10. G.K.சங்கர் அவர்களது கருத்து:

    "Clues are very interesting"

    மிக்க நன்றி - ராமராவ்

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    "very fine!"

    மிக்க நன்றி - ராமராவ்

    ReplyDelete
  13. திரை குறுக்கெழுத்துப் புதிர் - 4 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்

    2. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்

    3. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்

    4. சுரேஷ் பாபு

    5. ராமச்சந்திரன் வைத்தியநாதன்

    6. சாந்தி நாராயணன்

    7. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்

    8. ராமையா நாராயணன்

    9. K.R.சந்தானம்

    10. யோசிப்பவர்

    11. ஸ்ரீதரன் துரைவேலு

    12. வடகரை வேலன்

    13. மாதவன் வரதாச்சாரி

    14. பவளமணி பிரகாசம்

    15. C.அருந்ததி

    16. நாகமணி ஆனந்தம்

    17. சௌதாமினி சுப்பிரமணியம்

    18. G.K.சங்கர்



    பெரும்பாலோர் முதல் முயற்சியிலேயே சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள்.

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete