Friday, February 28, 2014

திரைக்கதம்பம் மலர் - 5


திரைக்கதம்பம் மலர் - 4 ல் கேட்கப்பட்ட கேள்வி:

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், முதல் எழுத்தும் கடைசி எழுத்தும், ஒரே எழுத்தாக அமைந்த, தமிழில்   வெளிவந்துள்ள  திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்ப வேண்டும்.  
 
குறிப்பு:

அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம்.    

வேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாகாது. 

விடைகள்:

திரைப்படங்களின் பெயர்களும், அவை வெளிவந்த ஆண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

1.    சிவலிங்க சாட்சி               (1942)
2.    குடும்ப விளக்கு 
               (1956)
3.    குலவிளக்கு                      (1969) 

4.    வா ராஜா வா                    (1969) 
5.    திக்கற்ற பார்வதி              (1974)
6.    மிட்டாய் மம்மி                  (1976)
7.    வாலிபமே வா வா            (1982)
8.    வா கண்ணா வா               (1982)
9.    கை கொடுக்கும் கை         (1984)

10.  புதிய தீர்ப்பு                        (1985)
11.  திருமதி ஒரு வெகுமதி     (1987)
12.  வா அருகில் வா                (1991)
13.  வா மகளே வா                  (1994)
14.  திருமூர்த்தி                        (1995)
15.  சிம்மராசி                           (1998)
16.  கண்மணி  உனக்காக        (1999)
17.  கண்ணுக்கு கண்ணாக      (2000)
18.  பாபா                                  (2002)
19.  ஜேஜே                                (2003)
20.  கையோடு கை                   (2003)
21.  ராமச்சந்திரா                      (2003)
22.  சிவகாசி                             (2005)
23.  திருப்பதி                            (2006)
24.  திண்டுக்கல் சாரதி            (2008)
25.  வாலிபமே வா                   (2010)
26.  கனகவேல் காக்க              (2010)
27.  விகடகவி                          (2011)
28.  ராரா                                  (2011)
29.  வாகை சூடவா                  (2011)
30.  யாயா                                (2013)       

*  சௌசௌ  தலைப்பில் ஒரு திரைப்படம் 1945ல்  வெளிவந்தது. அது உண்மையில் 3 சிறு குறும்படங்களின் தொகுப்பு. (1. கலிகால மைனர்  2. பள்ளி நாடகம்  3. சூரப்புலி). சௌசௌ என்றால் கலவை என்று பொருள். இதன் காரணமாக இது பட்டியலில் சேர்க்கப்படவில்லை.                         
 
விடைகளை அனுப்பியிருந்தவர்கள்:

1.    மாதவ் மூர்த்தி            (12 படங்கள்)
2.    முத்து சுப்ரமண்யம்    (25 படங்கள்)

இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.       
 

திரைக்கதம்பம் மலர் - 5

திரைப்படங்களின் தலைப்புகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது.
   
தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே உயிரெழுத்தை அடிப்படையாகக் கொண்டு,  உயிர், உயிர்மெய் எழுத்துக்களால் அமைந்தவையாக பல (ஏறத்தாழ 20) திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.   
 
உதாரணமாக, கீழே சில திரைப்படங்களின் பெயர்கள் அல்லாத சில தலைப்புகளைக் கொடுத்திருக்கிறேன்.   உருபு,  விசிறி,  கலவர, மாமா, சைகை.   

திரைக்கதம்பம்  மலர்  - 5 க்கான கேள்வி:

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே உயிரெழுத்தை அடிப்படையாகக் கொண்டு,  உயிர், உயிர்மெய் எழுத்துக்களால் அமைந்த, தமிழில்   வெளிவந்துள்ள  திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்ப வேண்டும்.  
 
குறிப்பு:

அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம். ஒரே எழுத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருக்கலாம்.    

வேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாகாது.

விடைகளை பின்னூட்டம் மூலமாக எழுதி அனுப்பவும்.

திரைப்படங்களின் பெயர்களை தமிழில் கீழ்க்கண்ட website சென்று பார்க்கலாம்.
http://reversetamilcinema.blogspot.in/2013/02/1940-2012.html
 

ராமராவ்   

Friday, February 14, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 6


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 6

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

விடைகளில் ஒரு திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலச் சொல்லாக இருக்கும்.





குறுக்காக:

5. இளையவன் தமையனை பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதம் (2,4)
6. மொரிஷியஸ் தீவுகளில் வாழும் முனிவர் (2)
7. வையம் நடுவில் உறைபனி மூடிய உயர்ந்த மலை (4)
9. மதிவாணன் மயங்கியதால் இறுதியில் காண முடியாத விண்ணிலவு (4)
10. மதுரைப்பூக்காரி மூத்தமகனின் காலில் தலைகுப்புற விழுந்தாள் (4)
12. மன்னர் தலைவன் துரைராஜன் காலொடிந்ததில் கலங்கினான் (4)
13. மௌனமாயிருப்பாளா துர்க்கை? (2)
14. குடியை விட்டதால் நமது கலை தரம் மாறுபட்டு உயர்ந்த ஊர் (6)

நெடுக்காக:

1, 2. கடைக்கு போனால் கிடைக்கும், கண்ணன் ஆரம்பத்தில் தேடி அலைந்த மதுக் கோப்பை (2,4)
2. 1 நெடு: பார்க்க
3. விரும்பியவனை அழை. குறைவாகவே அவன் பேசுவான் (3,1)
4. சிவகங்கைச்சீமை வீரன் குழப்பத்தில் முதல் மரியாதையை கௌரவத்துக்காக விட்டுக் கொடுத்தது பெருமதிப்புக்குரியது (3,3)
8. முடியாத ஒன்றை செய்ய திரிக்கும் பொடிமண் வடம் (3,3)
11. கவர்ந்திழுக்கும் காந்தி மதம் மாறியது புத்தியில்லாததால் (4)
12. நடராஜன் கடை சேதமடைந்தாலும் கடன் இல்லாமல் கம்பீரமாக நடக்கிறது (4)
15. விருப்பமின்றி அரவான் எடுத்த ஓட்டம் (2)
 
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக