Saturday, April 12, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 9


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 9

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.




குறுக்காக:


4. பிரம்மன் ஆயுதம் வைத்துக் கொள்ளாத ஒரு முனிவன் (3)

5. இடையர் இடையில் இணையான அன்பு கலந்த உறவு (5)

7. துடுப்பு ஆட்டக்காரன் கடைசியில் சிக்குவதோ நடுவானில் (2)

8. வியாழனன்று காணிக்கையாக சீடன் கொடுக்கும் பொருள்? (6)

10. பறவை அடக்கினவளின் துள்ளலில் வட போச்சே (6)

11. லகரங்களில் திருவிளையாடல் (2)

12. ஓமந்தூர் எல்லைகளில் கையேந்தும் ஒரு ராத்திரி (2,3)

13, 3 நெடு. அந்தப்பெண் எவர் என அறியாதவர்கள் கதறி போய் கலங்கினர் (3,2)


நெடுக்காக:


1. தனியார் மயமாவதன் கலவரத்தில் யாதவர் இடம்பெறாமல் செய்த தந்திரக்காரன் (6)

2. இளவேனிற் பருவத்தில் அரண்மனை சமாளிப்பது கைவந்த கலை. குழப்பம் செய்து குலைப்பது வேண்டாம். (4,3)

3. 13 குறு. பார்க்கவும்.

6. குடிகாரன் பாதி மக்களை ஆட்டிவைப்பான். மீதி நாகங்களை ஆட்டுவிப்பான். (7)

9. பிரஹலாதனை ஈன்ற கற்புக்கரசி வஞ்சனையோடு இயற்றிய கணிதநூல்? (2,4)

12. மாயையற்ற ஓலை குடிசை எழுப்பும் ஒலி (2)

Transliteration scheme:

உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக