Saturday, August 20, 2016

திரை குறுக்கெழுத்துப்புதிர் - 38


திரை குறுக்கெழுத்துப்புதிர் - 38

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


5. எல்லாம் நன்றாக கூடி வரும் நேரம், ஸ்வரம் குறைந்தாலும் கலங்குவது நம் காதலல்ல (3,3)

6. நடுவில் வெட்டி விட்டால் பெரும் ஒலி எழுப்பும் (2)

7. இஸ்லாத்தின் முக்கிய சின்னமாக கருதப்படும் தலையணி (3)

8. கந்தனிடம் இருக்கும் பணிப்பெண் தள்ளாடிய கொற்றவர் சிலரை சூழ்ந்தாள் (5)

11. ஆங்கில வண்ணத்தில் குழைத்த மண் விக்கிரகங்களுக்கு அணிகலன் (5)

12. தாரா விட்டுவிட்டு வந்த வாஸ்து டாலர் (3)

14. பத்தையும் பறக்கவைக்கும் வறுமை (2)

15. குறிப்பிட்ட சமயம் கோபத்தில் விலக நடுவில் தாவிட வேண்டாம் (6)


நெடுக்காக:


1. அருமை மகள் போக மதிப்பெண் குறைந்தது (6)

2. நதிக்கரையில் இருண்ட சிறைச்சாலை (3)

3. நாங்கள் இத்தனை பேர் என மும்மூர்த்திகள் இப்படி சொல்வர் (2,3)

4. 30 செ.மீ. நீள கம்பு சண்டை (4)

9. தொழுவத்தில் தொண்டாற்றுவதில் பெரும் மகிழ்ச்சி. ஒட்டிக்கொள்வதில் இருக்காது (6)

10. அண்டை நாட்டை சுற்றியதில் விஷ்ணு கண்ட ஒப்பனைக்காரி (5)

11. பாறையில் அகப்பட்ட கலம், நகர்த்த வேண்டாம் (4)

13. பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் மெய் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக