Thursday, April 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 46


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 46

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. எதிரி எவரோ கடைசியில் மரித்தது தலையெழுத்து (2)

6. பாசக்களத்தில் சிக்கியிருக்கும் மாற்றாளான மனைவி (6)

7. நாட்டியக்காரி நல்லவள்; வியாபாரம் செய்பவள். ஆனால் திறமையானவள் அல்ல (5)

8, 10 குறு: பண்ணையார் மகன் ஆளுகைக்குட்பட்ட சிறிய நிலப்பகுதி (3,3)

10. 8 குறு. பார்க்கவும்

12. கொளத்தூர் எல்லைகளில் திரிந்த மகப்பேரற்றவள் மெலிந்த தேகம் கொண்ட இளம்பெண் (5)

15. தாய்வழி உறவில் முறைப்பொண்ணு (3,3)

16. விடுமுறைக்கு ஷில்லாங் செல்வதில் மிக உற்சாகம் (2)


நெடுக்காக:


1. உயிர் விட்டுவிட்டு துதிப்பவர் தலைவர் (4)

2. இரு ஸ்வரங்கள் திருப்பித் தர சொன்னவன் கடைசியில் ஒரு சக்கரவர்த்தி (5)

3. முருகநூல் பாதி பாடியதில் பெருமை (3)

4. ஆதித்யன் ஆரம்பத்தில் திறமை இல்லாதவன். ஆனாலும் அனைத்தும் அறிந்தவன் (4)

9. நான்காம் மாதம் ஆறாம் நாள் அம்மனுக்கு ஒரு திருநாள் (5)

11. மீள முடியாத துயரத்தில் மகான் ஒரு மாலுமி ஆனார். (4)

13. அவதாரப் புதல்வர் இரட்டையர்? (4)

14. தலைநகரத்து தேன் எங்களுடையது (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

4 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து.

    "மிக ரசித்த புதிர். எல்லாமே மிக மிக ரசித்த குறிப்புகள்"

    ReplyDelete
  2. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து.

    "Thank you for the nice crossword."

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து.

    "As always, the clues are of a high standard."

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 46 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சுரேஷ் பாபு
    2. ராமையா நாராயணன்
    3. சௌதாமினி சுப்ரமண்யம்
    4. மாதவ் மூர்த்தி
    5. பவளமணி பிரகாசம்
    6. பாலாஜி
    7. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    8. முத்து சுப்ரமண்யம்
    9. ஆர்.வைத்தியநாதன்
    10. பொன்சந்தர்
    11. சாந்தி நாராயணன்
    12. G.K. சங்கர்
    13. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    14. ஸ்ரீதரன் துரைவேலு
    15. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete