Friday, November 22, 2013

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 2


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 2

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

குறுக்காக:
3.தலை எழுத்து மாறினால் கைம்பெண்ணும் கணவனை அடைவாள் (5)
6.சந்து கட்டிடம் இடிக்க கோபித்து கொள்ளக்கூடாது. இது அரசாணை (4)
7.தன் வலையில் சிக்கியவனை தாக்கி முன் செல்பவன் (4)
8.பொன் போன்ற பிள்ளை இருக்க மருமகன் வாசம் வேண்டாமே (3,3)
13.ஒன்றை இழந்து வேறிரு ஸ்வரங்களை சுமந்து நடப்பவள் தனலட்சுமி (3,3)
14.பாரி போல வாரி வழங்குபவர் (4)
15.அப்பனைப் பாடுபவர் தலைசிறந்த வேதம் ஓதாது விவரிக்க தடுமாறினார் (4)
16.தமையன் இளையவனைப் பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதம் (2,3)

நெடுக்காக:
1.கடை சத்தம் இல்லாது இரவில் ஈர்த்து மயக்குதல் (5)
2.விரைந்து செல்ல நாங்கள் நாவறண்டு ஓட்டிய தோணிகள் (5)
4.மன்மதனிடம் இருந்து அறியாமை நீங்கியதால் மானிடனாக மாறினான் (4)
5.கெண்டை தவறவிட்ட சேவலால் கதி கலங்கி பாடிய ராகம் (4)
9.தம்மை மறந்து தடம் பதித்த பாறை இருக்கும் நீர்ப்பரப்பு (3)
10.அமைதி வராமல் குழப்பத்தில் தூரம் போய்விட்ட சோழன் மகள் (5)
11.கால் சதம் கடந்தும் இரண்டாவதாக வந்ததில் கொண்டாட்டம்தான் (3,2)
12.சுகத்தால் தள்ளாடி கடைசியில் தான் கடித்ததால் தப்பித்த சிற்றெறும்பு (4)
13.இடையூறுகளைக் களைந்து சென்றால் வரும் ஐஸ்வர்யம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

Friday, November 15, 2013

திரைக்கதம்பம் மலர் - 2



திரைக்கதம்பம்    மலர் - 1 ல் கேட்கப்பட்ட கேள்வி:

"ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட  ராஜ  கம்பீர  காத்தவராய  கிருஷ்ண காமராஜன்"
 
திரைப்படத்தை அடுத்து அதிக எழுத்துக்களை தலைப்பாகக்   கொண்டு  தமிழ் மொழியில் வெளிவந்த திரைப்படம்  எது? / திரைப்படங்கள் யாவை? 

சரியான விடைகள்:

1.    உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 
2.    அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது

இந்த திரைப்படங்களின் தலைப்புகள்  20  எழுத்துக்களைக் கொண்டவை.  

இந்த சரியான விடைகளை அனுப்பியவர்கள்:   Madhav, முத்து, மதுமதி 
 
இவர்கள்  மூவருக்கும் பாராட்டுக்கள்.  நன்றி.

குறிப்பு: 
1.       இரண்டு தலைப்புக்கள் கொண்ட திரைப்படங்கள் கணக்கில் சேராது.
2.       அடுத்து அதிக  (19) எழுத்துக்களை தலைப்பாக கொண்ட திரைப்படங்கள்:  
                 1.  ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 
                 2.  பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்கக்கூடாது 
 
திரைக்கதம்பம் மலர் - 2

திரைப்படங்களின் தலைப்புகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது.

தமிழ் மொழி,   உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், ஆய்த எழுத்து, உயிர்மெய்யெழுத்துக்கள் என மொத்தம் 247 எழுத்துக்களைக்  கொண்டது.  இவற்றைத் தவிர, ஜ, ஸ, ஷ, ஹ   என்ற எழுத்துக்களை அடிப்படையாகக்   கொண்ட  வடமொழி   எழுத்துக்கள்  52ம், தமிழில் உபயோகத்தில் உள்ளன.
 
மெய்யெழுத்துக்களை தவிர, மற்ற எழுத்துக்களில் ஓரெழுத்தை  தலைப்புகளாக  கொண்டு  திரைப்படங்கள் வெளிவந்துள்ளதையும்,  வெளிவரப்போவதையும்  மலர் - 1 ல் பார்த்திருக்கலாம். 
 
ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களை தலைப்பாக கொண்டுள்ள திரைப்படங்களை ஆராய்ந்தால்,

ஒரேழுத்துக்குமேல் உயிரெழுத்துக்களை மட்டுமே தலைப்பாக  கொண்டு தமிழில் வெளிவந்த ஒரே திரைப்படம்:          அ ஆ இ ஈ 
 
மெய்யெழுத்துக்களே  இல்லாமல் தலைப்புகளைக் கொண்டு எத்தனையோ  திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.  உதாரணமாக, மெய்யெழுத்துக்களே  இல்லாமல், 2, 3, 4, 5, 6, 7 எழுத்துக்களைக் கொண்ட  திரைப்படத் தலைப்புகள்:
 
2 எழுத்துக்கள்:   ஆசை,  ஐயா,  குஷி,  பசி,  மாயி ..............
3 எழுத்துக்கள்:   தலைவா,  பிரியா,  அழகி,  மிளகா,  தவசி ..............          
4 எழுத்துக்கள்:   மகாநதி,  சரவணா,  திருடாதே,  பாதபூஜை .............
5 எழுத்துக்கள்:   கலையரசி,  தகதிமிதா,  குடியரசு,  அமராவதி ............
6 எழுத்துக்கள்:   தாமிரபரணி,  பணமா பாசமா, சதி லீலாவதி,  ............
7 எழுத்துக்கள்:   பிரியமானவளே, விவரமான ஆளு, நீ ஒரு மகாராணி  .......
 
இதற்கு மேல் மெய்யெழுத்துக்களே  இல்லாமல்  8, 9, 10, 11 எழுத்துக்களை தலைப்புகளாகக்  கொண்ட  திரைப்படங்கள்  மிகவும் குறைவு.
 
திரைக்கதம்பம்  மலர்  - 2  க்கான கேள்வி:
 
மெய்யெழுத்துக்களே  தலைப்புகளில் இல்லாத  8, 9, 10, 11 எழுத்துக்களைக் கொண்ட  திரைப்படங்களின்  பெயர்களை  நண்பர்கள்  அனுப்ப வேண்டும். நண்பர்களுக்கு எவ்வளவு திரைப்படங்களின் பெயர்கள் தெரிகிறதோ, அவற்றை தொடர்ந்து அனுப்பலாம்.  விடைகளை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
 
குறிப்பு:
விடைகள் மொத்தமே  15 க்கும்  குறைவான திரைப்படங்கள் தான். ஒரே ஒரு திரைப்படம் தான் மெய்யெழுத்துக்களே  இல்லாமல்  அதிகமாக 11 எழுத்துக்களைக் கொண்டது.  பெரும்பாலான திரைப்படங்கள் 1980 (1980 - 1989) களில் வெளிவந்தவை.  

திரைப்படங்களின் பெயர்களை தமிழில் கீழ்க்கண்ட website சென்று பார்க்கலாம்.

http://reversetamilcinema.blogspot.in/2013/02/1940-2012.html
 

ராமராவ்