இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
விடைகளில் ஒன்றிரண்டு திரைப்படங்களின் தலைப்புகள் ஆங்கிலச் சொற்களாக இருக்கும்.
|
குறுக்காக:
5. ஏகலைவன் வேதனை கொள்ளாதது எதற்கு? (2)
6. ஓரெழுத்து வேறுபாட்டில் இளைஞனும் இளம்பெண்ணும் (3,3)
7. தானம் செய்பவர் அதிகமாக வாழும் தகடூர்? (5)
8. ஒரு குஸ்தி மாஸ்டர் மறைந்தாலும் உயர்ந்தவர் (3)
11. கரம் பட்ட அதிர்ஷ்டம் கையில் வராத சிலை பாத்திரத்தில் காணவில்லை. (3)
13. மலருக்கேல்லாம் மன்னன் ஆரம்ப பூஜைக்கு ஒரு பொற்காசு மாற்றினான். (5)
16. பெரியோரின் பெயர் வைத்துக் கொள்ளாத பாபநாச மாமா திருமணம் காசுக்கும் அன்புக்குமான போராட்டமாக மாறியது (3,3)
17. அப்பாவி துறவி (2)
நெடுக்காக:
1. ஜெயித்தவர் விண்ணுக்கு மன்னர். மண்ணுக்கு அல்ல (4)
2. கடவுள் கைவிட்ட ஆண்பாம்பு வலியுடன் கலங்குவதால் சீறும் கொடிய மிருகம் (3,2)
3. கேட்பதற்கு டெனிம் சல்லடம் மாதிரி ஒலிக்கும் மரபணுக்கள் (3)
4. கலகம் விளைவித்த வஸ்தாதே பார்வதியின் காதலன் (4)
7. தன பங்கை கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் உடன்பிறப்பு (3)
9. உழும் நிலமாகி விட்டதால் திவாலாகியவன் ஓர் அதிகாரி (3)
10. மயிரிழந்தால் உயிர் துறக்கும் விலங்கு (5)
12. கற்புக்கரசியை கவர்ந்துசென்றவன் கவன குறைவால் கலங்கியதால் கணவரானவன் (4)
14. இல்லறவாசி நுழைய அனுமதிக்காது அபூர்வ சாகசம் புரி (4)
15. சபா கோஷ்டி பெருந்தொகை இழந்தது மிக நல்லது (3)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
1. பாபு (1971)
2. பாபா (2002)
3. ஜேஜே (2003)
4. காக்க காக்க (2003)
5. கொக்கி (2006)
6. அஆஇஈ (2009)
7. ராரா (2011)
8. லீலை (2012)
9. யாயா (2013)