இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.
விடைகளில் ஒரு ஆங்கிலச் சொல்லும், இரண்டு பெயர்களும் உண்டு.
|
குறுக்காக:3. முதன் முதலில் லட்சுமி, ஜானகி, ரேவதி, ரோகிணி, மல்லிகா இவர்கள் கலந்து கட்டிய பூ தான்! (2,3) 6. கோபம் உள்ளவரோடு இருக்கிற தழும்பு மறையும்படியான மாற்றம் தகும் (4) 7. உத்தரவு இட்டவர்களை எப்படியாவது இவர் துரத்தி விடுவார் (4) 8. சாரதா தவம் செய்து விளக்கும் திருமால் பெருமை (6) 13. நாக்கு வறண்டதால் நானாக திரும்பிப் பார்த்தேன், எனக்கொரு கனவு வந்தது (2,4) 14. சுழன்றதெல்லாம் நடுவில் சுகமான காற்றாக மாறியது (4) 15. மொகலாயருடன் போரிட்ட மகாராணா வீரப்பிரதாபன் சந்தனம் கடத்தியவனைக் கொன்று கடைசியில் நாட்டைப் பிடித்தான் (4) 16. சிறப்பாகவும் ஒன்றன்பின் ஒன்றாகவும் பெண்ணைப் பெற்றவர் செய்வார். (5)
நெடுக்காக:1. ஆரம்பத்தில் சரிந்து உட்கார முடியாத லைலா ஒரு காவியத்தின் தலைவி ஆனாள். (5) 2. மூலதனம் குறைவாகப் போடுபவன் தலைவன் (5) 4. ஜனனக் குறிப்பு கணிக்க ஜாதி, மதம் கடைசியில் சேர்க்க வேண்டும். புத்தி தேவையில்லை (4) 5. உலகையாண்டவன் சந்தோஷமாயில்லாத நகரம் (4) 9. மாமணி சச்சின் விருது இந்திய தேசத்ததல்ல (3) 10. மகாராணியை முதலில் பெற்றவள் பூமாதேவி. மற்றவளல்ல. (5) 11. குற்றத்தைப் பொருத்தருள எவ்வழியிலும் கருப்பு மனிதன் எண்ண மாட்டான் (5) 12. வடக்கே சென்றுவிட்ட டாக்டர் கேசவன் ஒருவிதத்தில் நடனமாடுபவர் கூட (4) 13. நங்கநல்லூரில் பாதி கல்விக்கூடம் தான் (4)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக