இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று திரைப்படத்தின் பெயரை type செய்தும் சரிபார்க்கலாம்.
|
குறுக்காக:
1. ஆண் வாரிசு உண்டு என்று உள்ளங்கையில் காட்டும் மீன்வடிவக் கோடு (5)
4. முதலில் தோன்றி நடுவில் பாழான நண்பா! (2)
6. தழும்பு சுரண்டி எடுத்தவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி (4)
7. சக்கையின்றி சவடால் அடிக்க துள்ளுவது கொடுஞ்செயல் (4)
9. ஆயுதம் இன்றி கிருஸ்தவ ஆலயத்து அன்னை வணங்கும் தாய்ப்பசு? (5)
12. நேர்மையுள்ள காசு? (4)
14. உட்கார வந்தவன் கடைசியில் சாகமாட்டான் (4)
16. விலாங்கு மீன் படை? (2)
17. பாலைவனத்தில் பொய்த்தோற்றம்? (3,2)
நெடுக்காக:
2. சுமமரியாதை இழந்து கலங்கி சன்மானம் தந்த மாமன் சந்திரன் (5)
3. முதலும் முடிவுமாய் கையேந்தி நின்ற குற்றவாளி (2)
4. இரண்டாவதாக கட்டிய பொன்வளை உள்ளே வெடிமருந்துச்சுருள் (3)
5. நன்கு கடித்து குதறி குத்துவிட்டான் கூத்தாடி (4)
7. மகளிர் விளையாட்டை முடிக்காத தாய் (3)
8. மத்தியில் நாங்கள் திரும்பிய எங்கள் தேசம் (4)
10. பிறந்த வீட்டில் தலையணை இன்றி இருக்க ஆசை (3)
11. காமராஜ் மரணத்தால் அரைகுறையாய் கட்டப்பட்ட மாளிகை (5)
13. முதியவனாய் விட்டுவிட்டு கலக்கத்தில் ஓடும் ஆறு (3)
15. எங்குமே காணாத பெண்ணின் பெயர் (2)
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |