இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.
விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.
|
குறுக்காக:5. ஆரம்பத்தில் ரசிக்க தவறிய கேரம் விளையாட்டு (2) 6. மாமிசம் குறைவாக கலந்துண்ட கோபத்தில் மன்னன் அமரும் இருக்கை (6) 7. உயர்மட்ட மக்கள் தலைமயிர் இழந்தால் சகிக்காமல் குமட்டிடுமே! (5) 8. நவராத்திரி சமயத்தில் உதவும் விளையாட்டுப் பொருள் (3) 10. செல்வத்தில் மிதந்து, கொடுத்து விட்டால் மரத்துப்போகும் (3) 12. குழந்தைகள் தும்மினாலோ அல்லது ஒருவரைப்பற்றி நினைக்கையில் அவரே நேரில் வந்தாலோ "நீண்ட நாள் வாழ" சொல்லும் வாழ்த்து (3,2) 15. சிதைந்த காதணி உள்ளடக்கிய அடைக்காயை காலடியில் சமர்ப்பணம் செய்யலாம் (6) 16. சரவணனிடம் பகல்வேளையில் எதிர்ப்படும் (2) நெடுக்காக:1. துவண்ட ராசாவாட்டம் இருந்தாலும் வாடமாட்டார் அசோக மன்னனைப் போன்றவர் (4) 2, 3 நெடு: பாரசீக எல்லைகளை கடந்துவிட்டபின் உள்ளே அகப்படும் விலங்கே சுவைக்கும் செல்வந்தனே! (5,3) 3. 2 நெடு பார்க்கவும் 4. மக்கள் இடையே ஞானம் நடுவில் உதயம் (4) 9. தாளத்தில் முறிந்த கையுள் சிக்கினால் வாழ்நாள் முழுதும் சிறைவாசி (3,2) 11. ஆங்கிலேய சோம்பி அருகில் தமிழன் வனப்பில் குறைந்தால் வருந்துவான் (4) 13. தாலி, பெண்ணுக்கு ஒரு மெல்லிழையாலான அரண் போன்றது (4) 14. இரவில் பணி தொடங்காத கொறிணி (3) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக