Saturday, April 12, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 9


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 9

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.




குறுக்காக:


4. பிரம்மன் ஆயுதம் வைத்துக் கொள்ளாத ஒரு முனிவன் (3)

5. இடையர் இடையில் இணையான அன்பு கலந்த உறவு (5)

7. துடுப்பு ஆட்டக்காரன் கடைசியில் சிக்குவதோ நடுவானில் (2)

8. வியாழனன்று காணிக்கையாக சீடன் கொடுக்கும் பொருள்? (6)

10. பறவை அடக்கினவளின் துள்ளலில் வட போச்சே (6)

11. லகரங்களில் திருவிளையாடல் (2)

12. ஓமந்தூர் எல்லைகளில் கையேந்தும் ஒரு ராத்திரி (2,3)

13, 3 நெடு. அந்தப்பெண் எவர் என அறியாதவர்கள் கதறி போய் கலங்கினர் (3,2)


நெடுக்காக:


1. தனியார் மயமாவதன் கலவரத்தில் யாதவர் இடம்பெறாமல் செய்த தந்திரக்காரன் (6)

2. இளவேனிற் பருவத்தில் அரண்மனை சமாளிப்பது கைவந்த கலை. குழப்பம் செய்து குலைப்பது வேண்டாம். (4,3)

3. 13 குறு. பார்க்கவும்.

6. குடிகாரன் பாதி மக்களை ஆட்டிவைப்பான். மீதி நாகங்களை ஆட்டுவிப்பான். (7)

9. பிரஹலாதனை ஈன்ற கற்புக்கரசி வஞ்சனையோடு இயற்றிய கணிதநூல்? (2,4)

12. மாயையற்ற ஓலை குடிசை எழுப்பும் ஒலி (2)

Transliteration scheme:

உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

10 comments:

  1. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " Thanks for giving an interesting puthir with some thought prvoking clues."

    ReplyDelete
  2. திரு வீ. ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    "எல்லா குறிப்புகளுமே வெகு அருமை திரு பார்த்தசாரதி அவர்கள் குறிப்பிடும் வகையில் எப்போது புதிர் வரும் என்று காத்திருப்பதே ஒரு சுகம் பணி நிற்காமல் தொடர வாழ்த்துக்கள். "

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    "ரசித்த குரிப்புகள்

    குறுக்காக:
    5. இடையர் இடையில் இணையான அன்பு கலந்த உறவு (5)

    நெடுக்காக:
    1. தனியார் மயமாவதன் கலவரத்தில் யாதவர் இடம்பெறாமல் செய்த தந்திரக்காரன் (6)
    12. மாயையற்ற ஓலை குடிசை எழுப்பும் ஒலி (2) "

    ReplyDelete
  4. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " எல்லாக் குறிப்புகளுமே மிக மிக நன்றாக உள்ளன.10.குறு 11. குறு மிக அருமை "

    ReplyDelete
  5. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Once again all wonderful clues :). Liked many of them. The ones I liked most are across 10,11 and down 1,2, 9 & 12.
    Keep up the great work. "

    ReplyDelete
  6. திரு தமிழ் அவர்களது கருத்து:

    " அருமை"

    ReplyDelete
  7. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Liked all the clues "

    ReplyDelete
  8. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    " Super "

    ReplyDelete
  9. திரு யோசிப்பவர் அவர்களது கருத்து:

    " //10. பறவை அடக்கினவளின் துள்ளலில் வட போச்சே (6)
    11. லகரங்களில் திருவிளையாடல் (2) //

    Simply Brilliant Clues. "

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 9 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சௌதாமினி சுப்பிரமணியம்
    2. G.K.சங்கர்
    3. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    4. K.R.சந்தானம்
    5. முத்து சுப்ரமண்யம்
    6. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    7. C.அருந்ததி
    8. ராமையா நாராயணன்
    9. மீனாட்சி சுப்பிரமணியன்
    10. பாலாஜி
    11. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    12. தமிழ்
    13. அந்தோணி இம்மானுவேல்
    14. பவளமணி பிரகாசம்
    15. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    16. மாதவன் வரதாச்சாரி
    17. நாகமணி ஆனந்தம்
    18. யோசிப்பவர்
    19. மாதவ் மூர்த்தி
    20. சாந்தி நாராயணன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete