Friday, June 20, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 12


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 12

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.



குறுக்காக:


3. பம்பர ஆட்டம் இறுதிவரை ஆடும் தலைமுறை (5)

6. உறுதிமொழி முடிவில் பேச சொல் (4)

7. இடையழகு இல்லாவிடினும் விழியழகுள்ளவள் கற்புக்கரசி (4)

8. இடையூறுகள் சில போனபின்பும் சிரமப்படுபவன் ஒருவகையில் பித்தன் (6)

13. நாங்கள் இரண்டுபேர் இவரும் நார் உரிக்க உதவினோம் (2,4)

14. உள்ளத்தில் கலங்கியது தினமலரில் சுருக்கமாய் வெளியாயிருந்தது (4)

15. முதல் ராத்திரியில் போக்கத்தவனிடம் சிக்கிய சொற்களஞ்சியம் (4)

16. உலகம் சுற்றும் ஆசிரியரை வந்தடையும் வியாழ நோக்கம் (5)

நெடுக்காக:


1. அன்புச்சுடர் தீபாவுக்கு சம்பளம் பாதியானதில் வருத்தம் (5)

2. தலைவலி நீங்கியபிறகும் அவர் மதம் மாறுவது நீதியல்ல (5)

4. கரன்சி மாற்றும் அபிமானி (4)

5. கடைசியில் மரண பயம் தாக்கிவிடும் பிரயாணம் (4)

9. அருள் தரும் அரவம் உருமாறி உயிரிழந்தது. (3)

10. மாப்பிள்ளை மணப்பிள்ளை? (5)

11. சரியாக 180 டிகிரி கோணத்தில் முன் பாதி எழுதியவர் (5)

12. பேசா நிலையில் ரத்தம் குறைந்த சித்தர் (4)

13. நாலுபேர் நாம் நல்லவர் என்பதில் பயனில்லை. (4)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

11 comments:

  1. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " வழக்கம் போல் எல்லா குறிப்புகளும் நன்றாக அமைக்கப் பட்டுள்ளன. "

    ReplyDelete
  2. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " The puthir is very interesting with well framed clues. "

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Excellent crossword with the right choice of words and the right level of difficulty. Since I liked all the clues, I’m not picking out the clues I liked. I’d say 16 ac. Made me think the most. I’m glad to say that Vanchi’s absence is now not felt as you’ve taken his place."

    ReplyDelete
  4. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Wow... wonderful clues. Liked many clues "

    ReplyDelete
    Replies
    1. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

      Wonderful clues-nga sir. I don't think I will come even a bit closer to you with framing the clues and it might need years of experience for me to come atleast 1/10 of your clues level :)...

      Delete
  5. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    "ரசித்தவை:

    குறுக்காக:

    6. உறுதிமொழி முடிவில் பேச சொல் (4)
    8. இடையூறுகள் சில போனபின்பும் சிரமப்படுபவன் ஒருவகையில் பித்தன் (6)
    15. முதல் ராத்திரியில் போக்கத்தவனிடம் சிக்கிய சொற்களஞ்சியம் (4)

    நெடுக்காக:

    2. தலைவலி நீங்கியபிறகும் அவர் மதம் மாறுவது நீதியல்ல (5) "

    ReplyDelete
  6. திருமதி பூங்கோதை சீனுவாசன் அவர்களது கருத்து:

    " Very interesting crossword, so many wonderful clues.
    My favourites were "பேச சொல்","பாதி எழுதியவர் " "ரத்தம் குறைந்த ". All surfaces were so smooth!! "

    ReplyDelete
  7. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " Thanks for this nice crossword! "

    ReplyDelete
  8. திரு தமிழ் அவர்களது கருத்து:

    " அருமையான புதிராக்கம்!! "

    ReplyDelete
  9. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " வழக்கம் போல் எல்லா குறிப்புகளுமே மிக நேர்த்தியாக புனையப்பட்டுள்ளன மிகவும் கவர்ந்தது உறுதிமொழி, வியாழ நோக்கம் அபிமானி, சித்தர் மற்றும் கற்புக்கரசி. சிறிது குழப்பியது 180 டிகிரி கண்டிப்பாகவே திரைப்பட சுட்டியை நோக்க வேண்டியது இல்லை. குறிப்புகள் மட்டுமே போதுமானவை. ஐயம் நீங்க துணை எழுத்தின் பயன் முற்றிலும் அவசியம். . வாழ்த்துக்களுடன்., வீ. ஆர். பாலகிருஷ்ணன் "

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 12 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பாலாஜி
    2. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    3. பவளமணி பிரகாசம்
    4. K.R.சந்தானம்
    5. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    6. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    7. ராமையா நாராயணன்
    8. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    9. முத்து சுப்ரமண்யம்
    10. சௌதாமினி சுப்பிரமணியம்
    11. மாதவ் மூர்த்தி
    12. G.K.சங்கர்
    13. பூங்கோதை சீனிவாசன்
    14. நாகமணி ஆனந்தம்
    15. சாந்தி நாராயணன்
    16. தமிழ்
    17 . C.அருந்ததி
    18. ஸ்ரீதரன் துரைவேலு

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete