Thursday, November 20, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 17


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 17

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கில மொழியில் இருக்கும்.


குறுக்காக:


3. பாதியில் புகுந்து திருடியவன் யாருக்கும் தெரிந்தவன் அல்ல (5)

6. லண்டன்வாசியை இன்றே நேசிக்கச் சொல் (2,2)

7. 15 நெடு: பார்க்கவும்

8. அழிந்துபோன பாரதவம்சத்து மணமகள் ஓடிப்போனாலும் உதிர சம்பந்தமான அன்பு இருக்கும் (6)

13. முனைகளொடிந்த போர்வாளை சுழற்றி சூழ்ச்சி செய்பவள் ஜனநாயக ஆட்சியை விரும்பாதவள் (6)

14. திருமாலடியார் பக்தியில் மூழ்குவார் (4)

15,7 குறு: கோபப்பார்வையால் செந்நிறமான விழிகள் (4,4)

16. தோப்பு மானியம் குறைந்ததால் கலங்கிய தோட்டக்காரி (5)

நெடுக்காக:


1. கப்பலில் வர குழப்பம் (5)

2. அருகிலுள்ளது வேகவைத்தது மாற்றிவிடு (5)

4. ஜனங்கள் கைவிட்ட ராமச்சந்திரன் நெற்றிப்பொட்டு (4)

5. சென்னை ஹோட்டல்களில் செட் தோசையுடன் கறிவடகம் அதிகமாகவே கலந்து தருவர் (4)

9. நடுநிலையான ஊர் எல்லையில் போர் ? (3)

10. தர்மத்தலைவன் தேநீர் தந்திடுவதின் நோக்கம் பாதியாய் கரைந்து உருகவே (5)

11. கிரிஜா தலையைக் கிள்ளி எறிந்து காலடியில் போட்ட மலர் (5)

12. சுற்றுப்புறம் தரும் சந்தர்ப்பம் ? (4)

13. அரசர் வம்சத்தில் எல்லாம் கிடைக்கும் (4)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " all clues are very good. Thanks a lot for giving a very interesting crossword."

    ReplyDelete
  2. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிக நன்றாக உள்ளன "

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிக ரசித்தவை: 8, 16 "

    ReplyDelete
  4. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " Interesting clues.. Thank you very much! "

    ReplyDelete
  5. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    " Super! "

    ReplyDelete
  6. திரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்து:

    " Another excellent crossword with good clues. Liked all esp 6ac, 2dn and 10 dn.. I admire your ability to compile so many crosswords on the same theme. Congrats and keep it up "

    ReplyDelete
  7. திரு தமிழ் அவர்களது கருத்து:

    "அருமையான புதிராக்கம்! "

    ReplyDelete
  8. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " எல்லா குறிப்புகளுமே வெகு அருமை. சினிமா பெயர் என்பது கூடுதல் குறிப்பு. கண்டிப்பாக நான் பெயர்களை பட்டியலில் சரிபார்த்து கிடையாது. தாங்கள் அளிக்கும் குறிப்புகளே போதுமானது.என்பது என்னுடைய எண்ணம் "

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 17 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. மாதவ் மூர்த்தி
    2. K.R.சந்தானம்
    3. சுரேஷ் பாபு
    4. முத்து சுப்ரமண்யம்
    5. பவளமணி பிரகாசம்
    6. ராமையா நாராயணன்
    7. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    8. பாலாஜி
    9. G.K.சங்கர்
    10. சாந்தி நாராயணன்
    11. சௌதாமினி சுப்பிரமணியம்
    12. வாசுகி அருணாசலம்
    13. நாகமணி ஆனந்தம்
    14. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    15. ஸ்ரீதரன் துரைவேலு
    16. தமிழ்
    17. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete