Sunday, December 20, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 30


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 30

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.


குறுக்காக:


4. மச்சத்துடன் தோன்றல் புனர் ஜென்மம் (5)

5. பெருமையில் குறைந்த சிலம்பாட்டத்தில் உடைந்த வாராவதி (3)

7. ஜானகி சீறுவதாக கோபிக்க வேண்டாம் (2)

9. இனிப்பாக உள்ளதே என்று சந்தோஷத்தில் ரொம்பவும் தத்தி குதிக்காதே (6)

10. வேங்கி நாட்டு வீர காவியம் அரசாங்கத்தாரால் அதிகம் மாற்றியெழுதப்பட்டது (6)

11. மாதவியை அரைகுறையாய் தவிக்க விட்டது பொய் (2)

12. துர்க்கை பாடும் ராகம்? (3)

13. துணிந்தவனுக்கு பஞ்சு மெத்தையான மரணதளம் (5)


நெடுக்காக:


1. எண்ணிக்கை தணி (2)

2. குறிசொல்பவளின் பிள்ளை குகன் பாலைநிலப் பெண்ணுடன் கலந்துதித்தவன் (4,3)

3. சாதியா, பண்பா என்பவற்றுள் ஓரெழுத்து வேறுபடும் (3,3)

6. கரத்தில் கவிதை இல்லாது சபாபதி ஆராதிக்கையில் மயங்கிடுவாள் மேல்மருவத்தூராள் (2,5)

8. பிரமிக்கும்படி விட்டு பிடிக்கும் பூமியில் கலக்கும் நதி (6)

14. மாதங்களில் ஆங்கிலத்தையும், தமிழையும் இணைத்த அறிவாளி (2)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்தவை: 7, 10, 1, 8, 14;

    2016 இனிதே தொடங்கி இனிதே நிறைவு பெறவும்
    இனிய புதிர்கள் வெளியிட்டு மகிழ-மகிழ்விக்கவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " மிகவும் ரசித்தது தாமிரபரணி "

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " By now we have come to expect high standard from you and you never disappoint. Thanks. As usual all clues were well-thought-out and very good. "

    ReplyDelete
  4. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    "Wonderful clues yet again "

    ReplyDelete
  5. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " All/clues are excellent "

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 30 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சுரேஷ் பாபு
    2. சாந்தி நாராயணன்
    3. மாதவ் மூர்த்தி
    4. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    5. சௌதாமினி சுப்ரமண்யம்
    6. முத்து சுப்ரமண்யம்
    7. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    8. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    9. ஸ்ரீதரன் துரைவேலு
    10. பவளமணி பிரகாசம்
    11. ராமையா நாராயணன்
    12. பொன்சந்தர்
    13. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    14. K.R.சந்தானம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete