Tuesday, December 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 42


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 42

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


3. 10 குறு: பார்க்கவும்

4. தபால் இலாகா அறையில் உறக்கம் கலைந்துவிடும் (4,2)

5. காலையில் தோன்றும் சூர்யா? (3)

6. உஷ்ணம் குறையாது உடனுக்குடன் (5)

9. புது மணத்தம்பதிகளை மகிழ்விக்கும் மதுமதி (5)

10, 3 குறு: ஞாயிறு ராத்திரி முதல் துருவப் பிரதேசங்களில் இருளில் ரவியைப் பார்க்கலாம் (3,4)

12. ஆயுதத்தை தலைகீழாக பிடித்திருக்கும் சரவணன் சகலகலா மன்னன் (6)

13. லட்சுமியுடன் தினம் கொண்டாட்டம் (4)


நெடுக்காக:


1. தஞ்சாவூரில் அவன் தாக்கப்பட்டாலும் ரொம்பத் துணிந்தவன் (6)

2. இரவில் காணப்படும் மலர் (3)

3. கொள்ளையடிப்பது அணிவதில் கறையாக்கி வெளிப்படுத்தி விடு (5)

7. சீனிவாசனை எழுப்ப, தப்பு தப்பா சுரம் பாடு (6)

8. புள்ளிகளை இணைக்கும் வடிவங்கள் (5)

11. பூந்தமல்லி எல்லைகளில் முதல் வேலையாக மலரால் அரண் அமைக்க வேண்டும் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    "மிக மிக நன்றாக இருக்கிறது"

    ReplyDelete
  2. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " All clues are very good "

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " Liked 9 and 13 very much "

    ReplyDelete
  4. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து

    Another excellent crossword. Keep up the good work.

    ReplyDelete
  5. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    மிக அருமையான புதிர்

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 42 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. சுரேஷ் பாபு
    3. பொன்சந்தர்
    4. சாந்தி நாராயணன்
    5. ராமையா நாராயணன்
    6. பாலாஜி
    7. K .R .சந்தானம்
    8. ஆர்.வைத்தியநாதன்
    9. மாதவ் மூர்த்தி
    10. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. G.K. சங்கர்
    13. சௌதாமினி சுப்ரமண்யம்


    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete