Tuesday, May 20, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 11


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 11

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் இரண்டு ஆங்கிலச் சொற்களைக் கொண்டதாகவும், ஒன்று ஒரு பெண்ணின் பெயரைக் கொண்டதாகவும் இருக்கும்.




குறுக்காக:


5. 15 நெடு: பார்க்கவும் (2)

6. தானத்தின் தரம் குறைந்தாலும், கொடையில் உயர்வானதாக மாறிவிடும் (6)

7. அரைகுறை ஆடம்பரத்தால் மாறுபட்ட தொகுப்பேடு (4)

8. குளிர்ச்சியாயிருக்கும் பிரதேசம்? (3)

9. மாநிலத்தில் விட்டுவிட்டு வந்தவள் பெயர் (3)

11. கடவுள் ஒருவன் (3)

13. சாலையாக மாறிய வேள்வி மண்டபம் (4)

16. குரங்கு சாப்பிட பாதி மலர் கசக்கி கொடுத்த செவ்வந்தி (6)

17. 12 நெடு. பார்க்கவும் (2)


நெடுக்காக:


1. கதை முடிவில் சூறாவளியில் சிக்கிய பொக்கிஷம் (4)

2. தூணிலிருந்து வந்தவனே தலைசிறந்த நரமாமிசம் அதிகமாகக் கலந்துண்டவன் (5)

3. வேளை வந்ததும் தாழ்ந்து போகும் சாஸ்திரம் (3)

4. விண்ணில் வர்ணஜாலம் தோன்றும்படி மாத்தி விடலாம். விமானத்தில் வா (4)

10. கொடையாக விட்டுத்தரும் மண்ணில் பூபதி சாமியாக மாறுவது சாப கேடு (5)

12, 17 குறு: கருவிழி மன்னன் ராஜாமணி கண் கலங்கினான் (4,2)

14. ஜப்பானிய படைவீரன் ராசாமுன் மாய்ந்த காரணத்தால் ஆண்மகன் இல்லை (4)

15, 5 குறு:. 50 சதவீதம் மண்ணுக்குள் மறைய மாற்றுப் புது வழி (3,2)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

10 comments:

  1. திருமதி பூங்கோதை சீனிவாசன் அவர்களது கருத்து:

    " Super entertainment!
    I can't even pick which one was my favorite, there are so many gems.
    சாப கேடு, மாத்தி விடலாம், விட்டுவிட்டு .
    Kudos! "

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Yet another wonderfully framed clues... Liked many of them "

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Very nice cluing as usual. பிடித்த குறிப்புகள்:

    11. கடவுள் ஒருவன் (3)
    16. குரங்கு சாப்பிட பாதி மலர் கசக்கி கொடுத்த செவ்வந்தி (6)
    1. கதை முடிவில் சூறாவளியில் சிக்கிய பொக்கிஷம் (4)
    2. தூணிலிருந்து வந்தவனே தலைசிறந்த நரமாமிசம் அதிகமாகக் கலந்துண்டவன் (5)
    14. ஜப்பானிய படைவீரன் ராசாமுன் மாய்ந்த காரணத்தால் ஆண்மகன் இல்லை (4)
    15, 5 குறு:. 50 சதவீதம் மண்ணுக்குள் மறைய மாற்றுப் புது வழி (3,2)

    Congrats and keep it up. "

    ReplyDelete
  4. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிக ரசித்தவை: 16,17 கு; 12 நெ. "

    ReplyDelete
  5. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " Thanks for giving a good crossword."

    ReplyDelete
  6. நிறைகள் :

    1) அரைகுறை ஆடம்பரம் - நிறையவே யோசிக்க வைத்தது , வேற்று மொழிகளிலும் யோசிக்க வேண்டும் என நினைக்கவில்லை

    2) குளிர் பிரதேசம் - நல்ல வார்த்தை விளையாட்டு . hats off to ur humor sense.

    3) விட்டு விட்டு, சாலை மாறியது ,குரங்கு சாப்பிட்டது ,மண்ணுக்குள் புதைந்தது அனைத்தும் அருமை.

    குறைகள் :

    1) அதிக அளவிலான வெட்டிய விடைகள் ( I mean same film for more than one clue, I know how difficult to form this clues, but we are expecting more such clues. By using same film for two clues you are robbing us a clue. Hope you can understand this. )
    2) நிறைய நேரடி குறிப்புகள் . (Don't think I am nitpicking, but u hv set the expectations high.)

    ReplyDelete
  7. திரு தமிழ் அவர்களின் கருத்து:

    " அருமையான புதிராக்கம் "

    ReplyDelete
  8. திரு வடகரை வேலன் அவர்களது கருத்து:

    " அருமை "

    ReplyDelete
  9. திரு அந்தோணி இம்மானுவேல் அவர்களது கருத்து:

    " திரைப்படப் பெயர்கள் என்ற குறுகிய சொற்பட்டியலில் கு. புதிர்களை வடிப்பதே பெரும் சாதனை. அதனை நேர்த்தியாகவும், திரைப்படப் பெயர்கள் தெரியாதவர்களும் ரசிக்கும் வண்னமும் நிகழ்த்திவரும் ராமராவிற்கு வாழ்த்துகளும் நன்றியும்.

    விட்டுவிட்டு வந்தவள்
    குளிர்ச்சியான பிரதேசம்
    சாப கேடு
    மாத்தி விடலாம். விமானத்தில் வா

    ஆகியவை என் மனம் கவர்ந்தன.

    ஜப்பானிய படைவீரன் என்பதற்குப் பதிலாக வெறும் படைவீரன் அல்லது கீழ்த்திசை படைவீரன் என்றிருந்தால் மிக அருமையாக+கடினமாக இருந்திருக்கும், "

    ReplyDelete
  10. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 11 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பூங்கோதை சீனிவாசன்
    2. சுரேஷ் பாபு
    3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    4. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    5. முத்து சுப்ரமண்யம்
    6. K.R.சந்தானம்
    7. பாலாஜி
    8. ராமையா நாராயணன்
    9. சாந்தி நாராயணன்
    10. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    11. மீனாட்சி சுப்பிரமணியன்
    12. மாதவ் மூர்த்தி
    13. C.அருந்ததி
    14. சௌதாமினி சுப்பிரமணியம்
    15. G.K.சங்கர்
    16. தமிழ்
    17. பவளமணி பிரகாசம்
    18. மாதவன் வரதாச்சாரி
    19. வடகரை வேலன்
    20. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    21. அந்தோணி இம்மானுவேல்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete