Wednesday, August 20, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 14


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 14

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்..

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. வருங்காலத்தில் வெண்கொக்குகளை கரை சேர்க்க வேண்டாம் (2)

6. பொன்னிற பறவை வாழ்ந்திருக்க, குளிக்கிற சுற்றுப்புறங்கள் இல்லாமல் தவித்தது (6)

7. கணவனின் வேறு குடும்பம்? (5)

8. இந்நாள் முதல் புகைப்பதை விட்டுவிட்டதால் சந்தோஷப்படு (3)

10. வீண்செலவு செய்பவன் தாள முடியாமல் சுற்றும் புல்லுருவி (3)

12. கரிகாலன் ஒரு துரோகி? (5)

15. நம்புவது விட்டு விடுவதும் இல்லாமல் காக்க கலங்குவது தோழமையின் பொருட்டு (6)

16. தெய்வமே! (நீ) திமுக இல்லையென்றால் தேமுதிகவா? (2)


நெடுக்காக:


1. மனைவியை கவிஞன் வில்லாக தொடுக்காவிடினும் வாலிபன்தான் (4)

2. மணியனின் கதை படிக்க பாதியில் இணையதளத்தில் இணைவது முதலில் வீண் (5)

3. நுணுக்கம் குறைந்த ஏர்மரம் (3)

4. பறவை மூக்கின் வடிவமைப்பில் சித்திரப்பாவை படைத்தவன் (4)

9. செல்வ புத்திரி மகாலட்சுமி (5)

11. பாட்டு பாடுவதாலா பாதியிலேயே மயங்கி பாப்பா தூங்குகிறது? (4)

13. வழியற்றுப்போன மகாதேவனுக்கு ஒருவகையில் கேட்டதெல்லாம் தரும் (4)

14. வஞ்சனை நடுவில் சிக்கி தவிக்கும் வல்லமை (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

8 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " 7கு, 2,9 நெ தவிர மற்ற அனைத்தும் சுவையாக இருந்தன;

    அதிகம் யோசிக்க வைத்தவை: 5,6 கு; 14 நெ "

    ReplyDelete
  2. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Another excellent crossword with good clues. Found it easier than usual. Came across 2 writers, 3 music directors and 1 actor. "

    ReplyDelete
  3. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " thanks for giving an excellent crossword. All clues are very good. "

    ReplyDelete
  4. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Nice clues again "

    ReplyDelete
  5. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " எல்லாக் குறிப்புகளிமே மிக மிக அருமையாகவும், மிகத் தெளிவாகவும், மேலெழுந்தவாரியாகப் படிக்க ஒரு பொருள் உடையதாகவும்( good surface reading) உள்ளன. "

    ReplyDelete
  6. திருமதி பூங்கோதை சீனிவாசன் அவார்கது கருத்து:
    Another wonderful crossword with extremely smooth surface and word play. Sometimes I think you should skip the definition part altogether , since we all know it is movie name :) and the definition part is making the clues easy inspite of the clever wordplay. Or may be you should not restrict the words to only movie names :). Definitely you must get tempted by some words all the time and miss defining them in your crosswords? "

    "

    ReplyDelete
  7. திரு தமிழ் அவர்களது கருத்து.

    " அருமை! "

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 14 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. பவளமணி பிரகாசம்
    3. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    4. K.R.சந்தானம்
    5. யோசிப்பவர்
    6. சௌதாமினி சுப்பிரமணியம்
    7. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    8. ராமையா நாராயணன்
    9. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    10. ஸ்ரீதரன் துரைவேலு
    11. மாதவ் மூர்த்தி
    12. சாந்தி நாராயணன்
    13. வடகரை வேலன்
    14. நாகமணி ஆனந்தம்
    15. G.K.சங்கர்
    16. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    17. பூங்கோதை சீனிவாசன்
    18. C.அருந்ததி
    19. பாலாஜி
    20. தமிழ்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete