Monday, October 20, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 16


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 16

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.

விடைகள் சிலவற்றில் ஆண், பெண் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.


குறுக்காக:


5. சீமானுடன் இல்லாத முட்டாள் சீனிவாசன் சுருங்கினான் (2)

6. ஆடை வேய முடியாத நண்பன் கூட இருந்தாலும் தைரியம்தான் துணை (3,3)

7. படுதா போடாத பாதிரியாரை முதலில் விற்க அலைந்த வர்த்தகன் (4)

8. பிறர் செய்த உதவிக்கு பிரதி பதில் வார்த்தை சொல்லாமல் மறப்பது நல்லதல்ல (3)

9. முதல் தேதி பிறந்த குழந்தை ஒருவகையில் சொந்த நாட்டைச் சேர்ந்ததே (3)

11. முதன் முதலில் சிறுமி வாயில் ஜிலேபி வைத்த மன்னன் (3)

13. சுற்றுப்பாதை தவிர்ப்பது நல்ல நெறி (4)

16. எஞ்சிய வயதில் குறைந்த செல்வமுள்ளவளாக மாறுபவள் (6)

17,1 நெடு: மும்மூர்த்திகளை குழந்தைகளாக்கி பாலூட்டிய கற்புக்கரசி சீக்கிரம் பொறாமை கொள்ளமாட்டாள் (2,4)

நெடுக்காக:


1. 17குறு: பார்க்கவும்

2. ஆஸ்திக்குரியவன் புதிதாக வந்தது எப்படியும் அரைகுறையாயும் வாசுவுக்குப் புரியாது (5)

3. கன்னட நாட்டிலிருந்து வந்தவள் பாதி வேலைக்காரியா மாறினாள் (3)

4. குடியானவன் உயரமாக வயதானவன் விலையாக மாட்டான் (4)

10. தியாகியே நேசிக்கையில் மாற்றம் உடம்பில் இருக்காது, தோழியே! (5)

12. கடைசி தமிழ் சொல்லை உருவாக்கிய ஜீவனம் (4)

14. அழிவு தொடங்காத குலம் (4)

15. ஜெயகாந்தனும் ஜெயலலிதாவும் பொதுவாகப் பெற்ற வெற்றி (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

12 comments:

  1. திருமதி பவளமணி பிரகாசம் அவர்களது கருத்து:

    " நன்று. "

    ReplyDelete
  2. திரு K.R. சந்தானம் அவர்களது கருத்து:

    " As usual all clues are very interesting and excellent. Thanks a lot for giving a good crossword. "

    ReplyDelete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " அருமையான புதிர்

    என்னைக்கவர்ந்தவை :

    கடைசி தமிழ் சொல்லை உருவாக்கிய ஜீவனம் (4)
    ஆஸ்திக்குரியவன் புதிதாக வந்தது எப்படியும் அரைகுறையாயும் வாசுவுக்குப் புரியாது (5)
    கன்னட நாட்டிலிருந்து வந்தவள் பாதி வேலைக்காரியா மாறினாள் (3) "

    ReplyDelete
  4. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிக ரசித்த குறிப்புகள்:

    குறுக்காக:

    6. ஆடை வேய முடியாத நண்பன் கூட இருந்தாலும் தைரியம்தான் துணை (3,3)
    9. முதல் தேதி பிறந்த குழந்தை ஒருவகையில் சொந்த நாட்டைச் சேர்ந்ததே (3)

    நெடுக்காக:

    4. குடியானவன் உயரமாக வயதானவன் விலையாக மாட்டான் (4)
    10. தியாகியே நேசிக்கையில் மாற்றம் உடம்பில் இருக்காது, தோழியே! (5)
    14. அழிவு தொடங்காத குலம் (4)
    15. ஜெயகாந்தனும் ஜெயலலிதாவும் பொதுவாகப் பெற்ற வெற்றி (3) "

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Another excellent crossword with good clues. Liked all esp 7ac and 2dn. but couln’t get the explanation for 4dn, though I got the answer " .

    ReplyDelete
  6. திரு வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " வழக்கம் போல் எல்லா குறிப்புகளுமே அருமை. மெய்யாலுமே தங்களின் புதிருக்காக காத்திருந்தேன். அருமை. "

    ReplyDelete
  7. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Nice clues as usual. Keep up the great work."

    ReplyDelete
  8. திரு தமிழ் அவர்களது கருத்து:

    " அருமையான புதிராக்கம்! "

    ReplyDelete
  9. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து"

    " Fine! "

    ReplyDelete
  10. திருமதி பூங்கோதை சீனிவாசன் அவர்களது கருத்து:

    " Another wonderful crossword.

    My favorites are 10 and 12 down. "

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 16 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பவளமணி பிரகாசம்
    2. பாலாஜி
    3. மாதவ் மூர்த்தி
    4. சாந்தி நாராயணன்
    5. K.R.சந்தானம்
    6. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    7. முத்து சுப்ரமண்யம்
    8. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    9. கண்ணன்
    10. ராமையா நாராயணன்
    11. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    12. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    13. தமிழ்
    14. சௌதாமினி சுப்பிரமணியம்
    15. நாகமணி ஆனந்தம்
    16. வாசுகி அருணாசலம்
    17. பூங்கோதை சீனுவாசன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete