Wednesday, May 20, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 23


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 23

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒரு ஆங்கிலச் சொல்லும் உண்டு.




குறுக்காக:


3. பெரும்பாலும் அடையாறின் சீற்றத்தை உணராதவன் (4)

5. தங்கம் வெல்லாதவன் தலையும் வாலும் இழந்தால் துஷ்டன் ஆக மாறிடுவான் (6)

6. கழி இல்லாமல் அடிக்காத தமக்கை (3)

7. கதிரவன் மறைந்தாலும் மாறாத வனப்புடன் திரியும் பறவை (5)

10. ராட்சதப் பல்லியை வளர்ப்பவன் படும் அவஸ்தை உன்னுள் தெரிகிறது (5)

11. 4 நெடு: பார்க்கவும்

14. அரசாளுமிடம் மேடுபள்ளமற்றது? (6)

15. 13 நெடு: பார்க்கவும்


நெடுக்காக:


1. வரையறை அமைக்க படிப்பறிவு இல்லாவிடினும் கோல் எடுக்கவில்லை (6)

2. இசைநயம் விட்டுவிட்டு புரிந்ததாம் (3)

3. அனன்யாவின் புடவை கிழித்த வினயாவை விட்டுவிடலாம் கருணையோடு (5)

4, 11 குறு: எவன் மெதுவாக கடைசியில் செல்பவன்? அவன் எவரது மகன்? (2,3)

8. வாசந்தியின் புதினம் காண்பது அன்றாடம் காணும் ஆகாயமல்ல (3,3)

9. மூன்று ஸ்வரங்களை உள்ளே வர விட்ட ஸ்வரம் தரும் உணர்ச்சி (5)

12. பருப்பு நிபுணர்? (3)

13, 15 குறு. இருவரும் ஆரம்பத்தில் துள்ளித் திரிந்த பூமியின் முனைகள் (2,4)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " Nice clues. had difficulty with 9 and 10.

    pistha is hilarious "

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " ரசித்தவை: 10, 1, 9; சந்தேகம்: 12 "

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Another winner with excellent clues. Enjoyed all, esp 10Ac and 9Dn "

    ReplyDelete
  4. திரு G.K. சங்கர் அவர்களது கருத்து:

    " All clues are nice"

    ReplyDelete
  5. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " எப்பொழுதும் போல இம்முறையும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. உள்ளே வர விட்ட ஸ்வரம் சற்றே குழப்பியது, விடை புரிந்ததும் wow என்று தோன்றியது. 5 குறு விடை வந்த விவரம் புரியவில்லை14. மிக அருமையான cryptic clue."

    ReplyDelete
  6. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " 8 குறு இதில் ”ய” என்ற எழுத்து எப்படி வருகிறது ?

    மெதுவாகச் செல்வதைப் “பைய “ செல்வது என்பது புரிய சற்று சமயம் எடுத்தது. அதை ஒரு பேச்சு வழக்குச் சொல் என்று நினைத்தேன். அகராதி பார்த்தபின் தான் தெரிந்தது அது ஒரு தமிழ்ச் சொல் என்று. "

    ReplyDelete
  7. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " தங்களின் குறிப்புகள் எல்லாமே அருமை. சம தளம் என்று குறிப்பிட்டதனை தாங்கள் province என்று குரிபிட்டதல் மட்டுமே இதனை காண முடிந்தது. "

    ReplyDelete
  8. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    " Fine! "

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 23 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    2. முத்து சுப்ரமண்யம்
    3. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    4. G.K.சங்கர்
    5. சாந்தி நாராயணன்
    6. பாலாஜி
    7. சுரேஷ் பாபு
    8. சௌதாமினி சுப்பிரமணியம்
    9. ராமையா நாராயணன்
    10. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    11. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    12. K.R.சந்தானம்
    13. மாதவ் மூர்த்தி
    14. ஸ்ரீதரன் துரைவேலு
    15. நாகமணி ஆனந்தம்
    16. பவளமணி பிரகாசம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete