Sunday, September 20, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 27


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 27

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் தமிழில் வெளிவந்த திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.


குறுக்காக:


3. ஆலயத்தின் இடிபாடுகளில் ஒரு லகரம் இழந்த ரவி (5)

6. மழை மேகத்தில் தோன்றும் பேரொளியே சஞ்சலைதான் (4)

7. பிரமன் ஒன்றும் கொடாதவன் (4)

8. பெரும்பாலும் தர்மத்தலங்களின் சிதைவுகளில் பொன்னிறமாக பூக்கும் (3,3)

12. ஜூலை மாத நோன்பு அனுஷ்டிக்க அசைந்து விட முடியாத தேர் வேண்டும் (2,4)

13. வீடு கட்ட நல்ல இடம். மாற்றி வைக்க வேண்டாம் (4)

14. நெடிலெழுத்துகளால் மன்னனை இருமுறை அழை (1,2,1)

15. குதிரை வாய்வடம் களவாடியதும் ஒருவிதத்தில் வயது குறைந்து போகும் (5)




நெடுக்காக:



1. அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும் தேவர் உணவு (5)

2. மைபூசாத மகராசி பேசாதிருக்கையில் பாடிய நிசப்த கீதம் (2,3)

4. சுதந்திர போராட்டத்திற்கு பொட்டிட்டவர் ? (4)

5. உயிர் விட துடிக்கும் அட்சயன் பெரும் பணக்காரன் (4)

9. கோடரி தாங்கிய அவதார புருஷன் எடுத்த மற்றொரு அவதாரம் (5)

10. வாலிபம் குறைந்ததால் ஒரு கிருத்தவன் கலங்கி கரடிவேந்தனாக மாறினான் (5)

11. அழகில்லாவிடில் அரை போக்கிரி (4)

12. ஆண்மகன் ஆரம்ப சம்பளம் நீர் கிடையாது (4)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

9 comments:

  1. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " எல்லாமே மிக மிக ரசிக்கும்படி அமைந்த குறிப்புகள் "

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிகவும் ரசித்தவை: 3, 8, 12, 2, 10 "

    ReplyDelete
  3. திருமதி பத்மஸ்ரீ அவர்களது கருத்து:

    " mannikkavum, sendra murai ennal ungal pudhirai mudikka mudiyavillai.
    indha murai satru elidhaga irundhadhu endru ninaikiren. "

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு அவர்களது கருத்து:

    " Nanri. Ungal Kurippukal migavum uthaviyaka irunthathu, "

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " I'm never tired of saying that yours is the crossword I most look foeward to and it never disappoints me.As always all clues were very good. "

    ReplyDelete
  6. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    " Fine! "

    ReplyDelete
  7. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " all clues are interesting and challenging. "

    ReplyDelete
  8. திரு வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " எல்லா குறிப்புகளுமே அருமை. "

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 27 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. மாதவ் மூர்த்தி
    2. சாந்தி நாராயணன்
    3. சௌதாமினி சுப்ரமண்யம்
    4. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    5. ராமையா நாராயணன்
    6. முத்து சுப்ரமண்யம்
    7. பவளமணி பிரகாசம்
    8. பத்மஸ்ரீ
    9. ஸ்ரீதரன் துரைவேலு
    10. பாலாஜி
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. நாகமணி ஆனந்தம்
    13. K.R.சந்தானம்
    14. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    15. பொன்சந்தர்
    16. சுரேஷ் பாபு
    17. வீ.ஆர். பாலகிருஷ்ணன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete