Sunday, May 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 59


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 59

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

புதிராக்கம்:ராமராவ்
1
 
2
 
3
 
 
 
 
 
 
 
4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
5
 
6
 
 
 
 
 
7
 
 
 
 
 
 
 
 
 
 
 
8
 
 
 
 
 
9
 
 
 
 
 
 
 
 
 
10
 
 
 
 
 
 
 
 
 
11
 
 
 
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
13
 
 
 
 
 
 
 
 
 
 
 
Save Answers   Load Answers   Submit Answers   © Hari Balakrishnan - puthirmayam.com

குறுக்காக:


3. ஆறு அறிவில் இருக்கும் கால்நடைகள் சில (4)

4. அறிஞர் இட்ட பணிகளை வெகுவாக மாற்றிய வாலிபர் கூட்டம் (4,2)

6. துன்புறுத்துவதை விட்டு போட்டு வாங்குவது ஒரு ஏமாற்று வேலை (3)

7. ஈழத்து அரசி எவ்விதத்திலாவது மரித்ததுண்டோ? கொஞ்சமும் இல்லை (5)

9. அடையாளம் அற்ற பாட்டாளி அருளில் கிடைத்த வீட்டின் சுற்றுப்புறம் (5)

10. கேள்வி தொடுத்து அறைகூவல் (3)

12. வைதேகி பிறப்பு நிகழ்ந்தது, இந்தி பேசும் மக்கள் கலவரம் செய்த சீனத்தில் (2,4)

13. தந்தையுடன் விடுதலை பெற்றவன் ஒரு வெகுளி (4)

நெடுக்காக:


1. பெரும் அபாயங்களை ஒருவழியாய் கடந்து மதில் அமைக்கப்பட்ட ஊர் (7)

2. பார்வதி பார்க்காதது பாதி பாழானது (3)

3. ரத்தினக் கழுத்தோனே ஐயப்பா! (5)

5. பிடித்தமான வண்டி, இசையில் உடைந்த கதவால் உருவானது (3,4)

8. தலையெடுத்து வாழ்பவன் நீண்ட ஆயுளுள்ளவன் (5)

11. வட இந்திய உணவு அளித்த பேரரசன் (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

8 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    1.எல்லாக் குறிப்புகளுமே, மிக மிக ரசிக்கும்படி உள்ளன.

    3, 6. 9, 11, 12, இவை கொஞ்சம் திணற வைத்தன.

    பாட்டாளியிலுள்ள அடையாளம் எனக்கு முற்றிலும் தெரியாத புதிய சொல். கண்டுபிடித்ததும் மிக மகிழ்ச்சியாயிருந்தது.

    ReplyDelete
  2. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " rasiththadhu 7,9 "

    ReplyDelete
  3. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Wonderful clues as usual and some of them are little challenging. Keep up the great work. "

    ReplyDelete
  4. இதுவரை விடைகளை அனுப்பிய நான்கு நண்பர்களில் ஒரே ஒரு நண்பர் மட்டும் 3 குறு: புதிருக்கு, மிகச் சரியான விடையை அனுப்பியிருந்தார். மற்ற நண்பர்கள் "மனிதன் / மனிதர்) என்ற தவறான விடையை அனுப்பியிருந்தார்கள். ௩ குறு: க்கான குறிப்பு: "ஆறு அறிவில் இருக்கும் கால்நடைகள் சில" என்பதை கொஞ்சம் குழப்புவதற்காகவே அப்படி கொடுத்திருக்கிறேன். மனிதன் / மனிதர் என்பது சரியான விடை அல்ல. வேறு விதத்தில் சிந்தித்து பார்த்து விடையை அனுப்புங்கள்.

    ReplyDelete
  5. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்தவை: 12, 1, 2

    ReplyDelete
  6. திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:

    " அருமை "

    ReplyDelete
  7. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    As usual an excellent crossword

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 59 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சுரேஷ் பாபு
    2. ராமையா நாராயணன்
    3. ஆர்.வைத்தியநாதன்
    4. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    5. பவளமணி பிரகாசம்
    6. முத்து சுப்ரமண்யம்
    7. பாலாஜி
    8. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    9. ஆனந்தி ராகவ்
    10. பொன்சந்தர்
    11. கோவிந்தராஜன்
    12. சாந்தி நாராயணன்
    13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    14. மாதவ் மூர்த்தி

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete