Wednesday, June 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 60


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 60

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


3. இரண்டாவது உலகம் சுற்றிய இடையன் ஒரு காவியத்தலைவன் (4)

4. தொடுவானத்தில் தோன்றும் வண்ணமதி (4,2)

6. ஜெர்மனி எல்லைகளுக்குள் முதலில் மிதிபட்ட இரட்டையர் (3)

7. தழைத்தோங்கும் தாவரம் மாலையில் மலர முடியாது கவிழும் (5)

9. பிரியத்தோடு நடுவில் வந்தவர் நாலில் ஒன்றோடு கலந்தார் (5)

10, 2 நெடு: மூன்றாவது வகுப்பில் தவறிய அழகு மாப்பிள்ளை, தாய்க்கு செல்லமகன் (3,3)

12. கையில் நிலாச்சாதம் தினமும் சேர்க்காதது பண்பாடு (6)

13. 11 நெடு. பார்க்கவும்


நெடுக்காக:


1. ஐவகை உணவு அறுபடை வீடுகளில் கிடைக்கும் (7)

2. 10 நெடு. பார்க்கவும்

3. வெளிநாட்டு பானமும் புட்டியும் சேர்ந்தால் கொண்டாட்டம்தான் (5)

5. கந்தஷஷ்டியன்று அசுரவதம் (2,5)

8. நடு கட்டிடத்தின் உள்ளே வழக்கு ஆரம்பம் (5)

11, 13 குறு: உணர்ச்சி முகடு எட்ட, உயரத்தில் அமைக்க வேன்டும் (3,4)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    மிகமிக அருமையான புதிர்.

    7.கு ; மாலையில் மலர முடியாத = ஆரம்+மல
    மிக அருமை. கவிழும் என்ற Reverse indicator மிக ரசித்தேன்.

    9.நான்கில் ஒன்று கொஞ்சம் திணறினேன். கால் என்பது புரிய நேரம் எடுத்தது.

    3.நெ புட்டி = கலம் நல்ல குறிப்பு

    மொத்தத்தில் மிக ரசித்த புதிர்.

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்தவை: 3 நெ, 4 கு, 11 நெ 13 கு

    ReplyDelete
  3. திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:

    அருமையான புதிர்.

    ReplyDelete
  4. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Very nice clues.

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Enjoyed solving the crossword. As always the clues were very nuanced.and thought-provoking. I admire your tenacity particularly since I don't get the mood to restart அபாகு.

    Congrats. Keep it up.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 60 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பாலாஜி
    2. சுரேஷ் பாபு
    3. ஆர்.வைத்தியநாதன்
    4. ராமையா நாராயணன்
    5. பவளமணி பிரகாசம்
    6. முத்து சுப்ரமண்யம்
    7. சௌதாமினி சுப்ரமண்யம்
    8. கோவிந்தராஜன்
    9. சாந்தி நாராயணன்
    10. மாதவ் மூர்த்தி
    11. ஆனந்தி ராகவ்
    12. பொன்சந்தர்
    13. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    14. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    15. G.K.சங்கர்
    16. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete