Friday, November 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 89


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 89

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் மூன்று ஆங்கிலச்சொற்கள்.


குறுக்காக:


5. பாலில் மிதக்கும் உடலை மறைக்கும் (2)

6. பெரிய ரிஜிஸ்ட்ரார் அதிகமாக கடித்துண்ணும் கனி (6)

7. கண்ணீர் விட காலை இழந்த கேசவன் சுந்தரக்கடவுள் (5)

8. கொடை வள்ளலே ஓர் வாத்தியம் (3)

10. கண்ணியம் கட்டுப்பாட்டுக்கு முன் ஆற்ற வேண்டிய பொறுப்பு (3)

12. பார்த்தசாரதிக்கோர் பாதி உருகிய ஐஸ்கிரீம் (5)

15. தோலுரிக்கப்பட்ட வெள்ளாடு நீராடுதுறையில் திருட்டு விளையாட்டு (6)

16. காணொளியில் துர்காதேவி தெரிவாள் (2)


நெடுக்காக:


1. பரிவாரம் சுற்றிவர சூரி பழக்கடையில் சிறு கலவரம் (4)

2. நம்பிக்கை தரும் விடுதலை மூச்சு (5)

3. துலாக்கோல் தந்த மிராசுதார் நீர்மேல்கிடந்தாரில்லை (3)

4. அரசவை உள்ளே ஒருத்தர் பார்ப்பனர் (4)

9. தலையாய நோக்கம் இல்லாத இஸ்லாமியர் கூட்டத்தில் தொட்டியர் வணங்கும் தேவதை (5)

11. இங்கிலாந்தில் ஆட்டத்தில் இரட்டையர் (4)

13. ஆடுமாடுகளை வளர்த்து வியாபாரம் செய்பவள் பெரும்பாலும் காப்பாரில்லாது கலங்குவாள் (4)

14. கொஞ்சம் சாப்பாட்டை வீணாக்கினால் சவுக்கு (அடி) (3)




Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக