Monday, April 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 82


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 82

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


4. படரும் புறங்களில் கொள்ளையடி (2)

5. 25 தோற்றம் (2)

6. ஐரோப்பிய தலைநகரில் வனஜா திரிந்தலைந்த பூந்தோட்டம் (5)

7. தேன் துளி உண்ட ஆங்கில துரை ஒரு ராட்சசன் (5)

8. சின்னாளப்பட்டியில் சிறியவனை அழைக்கும் விதம் (3)

10, 14 நெடு. சாகா நெருப்பு பற்றும் பக்கங்களில் அணையா விளக்கு (3,3)

12. இதற்குமேல் அந்தப்பெண்தான் பிரியமானவளே (5)

15. சரியான தேதிக்கு புஷ்பம் பறித்தால் நுழையும் நாட்டுப்பற்று (5)

16. மழை தேவதை (2)

17. விண்ணை விட்டு வெளியேறிய ஜீவாவின் உயிருடன் இருப்பது (2)


நெடுக்காக:


1. முதலில் ஒற்றுமையாய் இருப்பவன் பாதி ஆண்மகன் (4)

2. இறுதியில் எவரோ சம்பாத்தியத்தில் நடக்கும் ரதோற்சவம் (5)

3. கடையில் இருப்பவரே வயதில் குறைந்த பெண் (3)

4. தலைக்கொரு பழத்தை விட்டெறிந்த கம்பனின் யானை (4)

9. கற்புடையவள் கலங்கினால் கடைசிவரை மஞ்சுமூட்டம் (5)

11. பார்வதி உயர்ந்த தெய்வமகள் (4)

13. வலையில் சிக்கிய மாட்டை இடையில் விட்டு விட்டால் திரும்பவும் ஆஞ்சநேயருக்கு சாத்தலாம் (4)

14. 10 குறு: பார்க்கவும்


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக