Tuesday, January 28, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 5


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 5

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.விடைகளில் ஒன்றிரண்டு திரைப்படங்களின் தலைப்புகள் ஆங்கிலச் சொற்களாக இருக்கும்.குறுக்காக:

5. ஏகலைவன் வேதனை கொள்ளாதது எதற்கு? (2)
6. ஓரெழுத்து வேறுபாட்டில் இளைஞனும் இளம்பெண்ணும் (3,3)
7. தானம் செய்பவர் அதிகமாக வாழும் தகடூர்? (5)
8. ஒரு குஸ்தி மாஸ்டர் மறைந்தாலும் உயர்ந்தவர் (3)
11. கரம் பட்ட அதிர்ஷ்டம் கையில் வராத சிலை பாத்திரத்தில் காணவில்லை. (3)
13. மலருக்கேல்லாம் மன்னன் ஆரம்ப பூஜைக்கு ஒரு பொற்காசு மாற்றினான்.  (5)
16. பெரியோரின் பெயர் வைத்துக் கொள்ளாத பாபநாச மாமா திருமணம் காசுக்கும் அன்புக்குமான போராட்டமாக மாறியது (3,3)
17. அப்பாவி துறவி (2)

நெடுக்காக:

1. ஜெயித்தவர் விண்ணுக்கு மன்னர். மண்ணுக்கு அல்ல (4)
2. கடவுள் கைவிட்ட ஆண்பாம்பு வலியுடன் கலங்குவதால் சீறும் கொடிய மிருகம் (3,2)
3. கேட்பதற்கு டெனிம் சல்லடம் மாதிரி  ஒலிக்கும் மரபணுக்கள் (3)
4. கலகம் விளைவித்த வஸ்தாதே பார்வதியின் காதலன் (4)
7. தன பங்கை கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் உடன்பிறப்பு (3)
9. உழும் நிலமாகி விட்டதால் திவாலாகியவன் ஓர் அதிகாரி (3)
10. மயிரிழந்தால் உயிர் துறக்கும் விலங்கு (5)
12. கற்புக்கரசியை கவர்ந்துசென்றவன் கவன குறைவால் கலங்கியதால் கணவரானவன் (4)
14. இல்லறவாசி நுழைய அனுமதிக்காது அபூர்வ சாகசம் புரி (4)
15. சபா கோஷ்டி பெருந்தொகை இழந்தது மிக நல்லது (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ


நகல் அனுப்புக

Wednesday, January 8, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 4


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 4

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.


குறுக்காக:
3. இளவரசியும் மன்னன் மகள் (5)
6. மலையுச்சி அடைந்த மனிதன் இறங்கினால் ரசிகனின் மதம் மாறும் (4)
7. விருப்பமின்றி புகை பிடிப்பவன் எப்படியும் நண்பன் ஆகமாட்டான் (4)
8. மீண்டும் தேறுபவன் ஆண்டவன் கைவிட்டால் இறக்கும் நிலையில் இருப்பான் (6)
13. ஆறாவது ராசிக்காரி மணமாகாத மங்கை (6)
14. மரியாதைக்குரியவன் பல இடையூறுகளைக் களைந்தாலும் சாகமாட்டான் (4)
15. சம்பாத்யம் குறைந்தது உண்மைதான் (4)
16. பணிப்பெண் காவேரி சிலைக் கையை உடைத்ததால் தலைமுடியை இழந்தாள் (5)

நெடுக்காக:
1. பரமசிவம் ஒரு குற்றம் குறையற்ற மாணிக்கம் (5)
2. மாலையில் காய்ந்த நீலாம்பரி தொடுப்பதின் தொடக்கம் (4)
4. பங்கஜம் பம்பரமாய் சுழன்றதில் வீண் பெருமை கொண்டாள்
5. கற்பவன் கண்ணன் மாவடு பார்த்து விட்டால் கலக்கிடுவான் (4)
9. யுத்தத்தின் ஆரம்பத்தில் சிறிது வன்முறையை கையாண்ட இளைஞன் (3)
10. பிராமணப்பெண் குழந்தை ஆத்திரத்தில் மாலையில் வரவில்லை (5)
11. விழி பரிமாணம் குறைந்ததால் கலங்கினாள் பாரதியின் காதலி (5)
12. குழிவிழும் குமரி எழிலை குலைத்தால் கொடுந்தீ கொப்பளிக்கும் (4)
13. பெண்ணை ஒருவனுக்கு கட்டிக் கொடுக்கும் தானம் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Friday, January 3, 2014

திரைக்கதம்பம் மலர் - 4


திரைக்கதம்பம் மலர் - 3 ல் கேட்கப்பட்ட கேள்வி:

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், ஒரே வருக்கத்தைக் கொண்டு, வெளிவந்துள்ள திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்பலாம். 
குறிப்பு:

விடைகள் மொத்தமே  9 (ஒன்பது) திரைப்படங்கள் தான். அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம்.   

வேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாகாது. 

விடைகள்:

திரைப்படங்களின் பெயர்களும், அவை வெளிவந்த ஆண்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

1.    பாபு                 (1971)
2.    
பாபா               (2002)
3.    ஜேஜே             (2003) 

4.    காக்க காக்க   (2003) 
5.    கொக்கி          (2006)
6.    அஆஇஈ          (2009)
7.    ராரா               (2011)
8.    லீலை             (2012)
9.    யாயா             (2013) 

 
விடைகளை அனுப்பியிருந்தவர்கள்:

1.    முத்து சுப்ரமண்யம்    (7 படங்கள்)
2.    யோசிப்பவர்               (1 படம்)
3.    மாதவ் மூர்த்தி             (6 படங்கள்)  
 

திரைக்கதம்பம் மலர் - 4

திரைப்படங்களின் தலைப்புகள் பற்றிய ஆய்வு தொடர்கிறது.
   
தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், முதல் எழுத்தும் கடைசி எழுத்தும்  ஒரே எழுத்தாக அமைந்து பல (25க்கும் மேற்பட்டவை)திரைப்படங்கள்   வெளிவந்துள்ளன.
 
உதாரணமாக, கீழே சில திரைப்படங்களின் பெயர்கள் அல்லாத சில தலைப்புகளைக் கொடுத்திருக்கிறேன்.   புன்சிரிப்பு, தை பிறந்த கதைசார் வந்தாச்சா, மேமே   

திரைக்கதம்பம்  மலர்  - 4 க்கான கேள்வி:

தமிழ் திரைப்படங்களின் தலைப்புகளில், முதல் எழுத்தும் கடைசி எழுத்தும், ஒரே எழுத்தாக அமைந்த, தமிழில்   வெளிவந்துள்ள  திரைப்படங்களின் பெயர்களை நண்பர்கள் எழுதி அனுப்ப வேண்டும்.  
 
குறிப்பு:

அவை 2 எழுத்துக்கள் கொண்ட தலைப்பாகக் கூட இருக்கலாம்.   

வேறு மொழியிலிருந்து தமிழ் மொழியாக்கம் செய்யப்பட திரைப்படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாகாது.

விடைகளை பின்னூட்டம் மூலமாக எழுதி அனுப்பவும்.

திரைப்படங்களின் பெயர்களை தமிழில் கீழ்க்கண்ட website சென்று பார்க்கலாம்.
http://reversetamilcinema.blogspot.in/2013/02/1940-2012.html
 

ராமராவ்