குறுக்காக:
3. தென் அமெரிக்க நாடு முதலில் சுற்றிய கிராமத்து பெரிய மனிதர் (3)
5. ராணுவம் பாதியாக குறைந்து கலைந்தது போரின் மிரட்டலினால் (5)
6. தீமையினால் நெருப்பில் கருகிவிட்ட பறவை (2)
7. நவம்பர் மாதத்தில் பெயர் மாறிய நாடு (3)
8. கடக்க வந்ததும் கொடுத்து விட்ட கூத்து (5)
11. மகுடிக்காரன் ஆணைப்படி கலங்கிய பசு பாடும் பேச முடியாது (2,3)
12. கூச்சப்படும் புல்? (3)
14. ஆயுதம் இன்றி மீள்வாரா இந்த பக்தை? (2)
16. அப்பா உயிர் போனபின் துயரப்படுபவன் ஏந்திய ஆயுதம் (5)
17. தாவ முடியாத ஒருவகைமான் சூடும் மலர் (3)
நெடுக்காக:
1. புகுந்த இடம் சிலருக்கு சிறைச்சாலை? (4,2)
2. படகோட்டியதில் பிடித்த பைத்தியம் (3)
3. மூத்தவன் கண்ணாயிரம் பெயரில் மறைத்தது பாதி கலைத்தது மீதி (5)
4. 180 தேங்காய் என்றால் அதிக பாரம் (2)
9. அரைகுறையாய் உடைந்த கிண்ணத்தை தூக்கி காற்றில் எறிந்த பறவை (6)
10. இளைய அதிகாரி நிலத்தில் கருவண்டு மயங்கி விழுந்தது (5)
13. அண்டை நாட்டவன் கூர்க்கா பேசும் பாஷை? (3)
15. முதன் முதலில் ராகத்துடன் தாளத்தை சேர்த்து கண்ணனை கவர்ந்தவள் (2)