Friday, September 19, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 15


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 15

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.

சில விடைகளில் ஆண், பெண் பெயர்கள் இடம் பெற்றிருக்கும்.


குறுக்காக:


5. திருச்சூரில் எழுந்தருளியிருக்கும் மாகாளி (2)

6. பா.ஜ.க.வின் மானியம் குறைந்த வருத்தத்தில் கிருஷ்ணனின் மனைவி வந்தாள் (2,4)

7. அந்தாதியில் முடிந்த ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்று கலக்கிய இஸ்லாமியன் (4)

8. தான் ஓர் உயிர் என அறிமுகப்படுத்திக் கொள்ளும் பூச்சி (2,1)

10. பழம் தின்றுவிட்டால் விமானியாக மாறிடும் தந்திரக்காரன் (3)

12. நம்மவர் தலைநகரை விட்டுப்போனால் எப்படியும் உட்பகை தோன்றிவிடும் (4)

15. பெண்பிள்ளைக்காக கொஞ்சம் நிதானம் இழந்தால் கானக மக்களும் தவிப்பர் (6)

16. குமரியோ கிழவியோ சலனப்படாதவன் (2)

நெடுக்காக:


1. ஒரே அரங்கில் மூன்று தீபாவளிகளை கொண்டாடிய விஷ்ணுபக்தன் (4)

2. பாசம் குறைந்ததால் புஷ்பா கலங்குவது மிக நல்லது எஜமான் (3,2)

3. அரசன் ஆயுதம் சேர்த்து வணங்குமிடம் (3)

4. பேய் பிடிக்காத யானைக்கன்று திரும்பவும் உள்ளே கொண்டுவந்தால் நான் தலைவன் (4)

9. அவனும் அவளும் ஒருவகையில் உயிர் கள்வர் (5)

11. என்னுள் உடன் இருக்கும் இரப்போன் (4)

13. யானை வருவதை முன்னே உணர்த்தும் ஒலி (4)

14. விலங்குக் கூட்டத்தில் சிக்கிய பறவை (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Wednesday, August 20, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 14


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 14

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்..

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. வருங்காலத்தில் வெண்கொக்குகளை கரை சேர்க்க வேண்டாம் (2)

6. பொன்னிற பறவை வாழ்ந்திருக்க, குளிக்கிற சுற்றுப்புறங்கள் இல்லாமல் தவித்தது (6)

7. கணவனின் வேறு குடும்பம்? (5)

8. இந்நாள் முதல் புகைப்பதை விட்டுவிட்டதால் சந்தோஷப்படு (3)

10. வீண்செலவு செய்பவன் தாள முடியாமல் சுற்றும் புல்லுருவி (3)

12. கரிகாலன் ஒரு துரோகி? (5)

15. நம்புவது விட்டு விடுவதும் இல்லாமல் காக்க கலங்குவது தோழமையின் பொருட்டு (6)

16. தெய்வமே! (நீ) திமுக இல்லையென்றால் தேமுதிகவா? (2)


நெடுக்காக:


1. மனைவியை கவிஞன் வில்லாக தொடுக்காவிடினும் வாலிபன்தான் (4)

2. மணியனின் கதை படிக்க பாதியில் இணையதளத்தில் இணைவது முதலில் வீண் (5)

3. நுணுக்கம் குறைந்த ஏர்மரம் (3)

4. பறவை மூக்கின் வடிவமைப்பில் சித்திரப்பாவை படைத்தவன் (4)

9. செல்வ புத்திரி மகாலட்சுமி (5)

11. பாட்டு பாடுவதாலா பாதியிலேயே மயங்கி பாப்பா தூங்குகிறது? (4)

13. வழியற்றுப்போன மகாதேவனுக்கு ஒருவகையில் கேட்டதெல்லாம் தரும் (4)

14. வஞ்சனை நடுவில் சிக்கி தவிக்கும் வல்லமை (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக