Tuesday, March 4, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 7


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 7

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம். திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் சில திரைப்படங்களின் தலைப்புகளில் ஆங்கிலச் சொற்கள் இருக்கும்.


குறுக்காக:

4. தரம் மிக்க சீட்டாட்டம். (3)

5. மேலைச் சாளுக்கிய அரசன் அதிக திறமையானவன். (5)

7, 10 குறு: குற்றவாளி ஒருவரின் நினைவேடு உருவானது ஒரு உடையின்றி திரிகையில். தூக்கு கயிறில் அல்ல. (2,4,2)

8. மத்தாப்புகள் உண்டாக்கும் நிறங்களின் மாயவித்தை. (6)

10. பார்க்க 7 குறு:

11. பேச்சு குறை கூறு. (2)

12. கைதவறிய பாதரட்சையை வேலி போட்டு காக்கவேண்டும். (5)

13. சம்பாதித்து தரும் ஆயுதம். (3)


நெடுக்காக:

1. திரும்பத் தொடங்கும் செடியிலிருந்து உருவாகும் சிவத்ததாசி. (6)

2. திருமண அன்பளிப்புக்கான காசுபணம் கரியானால் கலக்கத்தில் காம்னா காணாமல் போய்விடுவாள். (4,3)

3. அகந்தை கொள்ளக்கூடாத தன்மை. (2)

6. செய்த தீவினைகளை பொறுத்துக்கொள்ள வேண்டுதல் கிருத்தவ சம்பிரதாயம். (2,5)

9. சின்னஞ்சிறு கிளிகள் காதல் பறவைகள். (2,4)

12. பாழுங்கிணறை சூழ்ந்திருக்கும் கருங்கல். (2)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

10 comments:

  1. திரு சுரேஷ் பாபு அவர்களது கருத்து:

    " இந்தமுறை வெகு சுலபமாகவே இருந்தது. "

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Wonderful clues as usual and some of them are exceptional. "

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " ரசித்த குறிப்புகள்:
    12. கைதவறிய பாதரட்சையை வேலி போட்டு காக்கவேண்டும். (5)
    13. சம்பாதித்து தரும் ஆயுதம். (3) "

    ReplyDelete
  4. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Another winner. Congrats. I think I have now got the hang of your clueing. So it was relatively easy. The clues I liked are

    7, 10 குறு: குற்றவாளி ஒருவரின் நினைவேடு உருவானது ஒரு உடையின்றி திரிகையில். தூக்கு கயிறில் அல்ல. (2,4,2)

    11. பேச்சு குறை கூறு. (2)

    12. கைதவறிய பாதரட்சையை வேலி போட்டு காக்கவேண்டும். (5)

    13. சம்பாதித்து தரும் ஆயுதம். (3)

    நெடுக்காக:

    1. திரும்பத் தொடங்கும் செடியிலிருந்து உருவாகும் சிவத்ததாசி. (6) (Learnt a new meaning, though the dictionary I use shows பரத்தை as தாசி)

    2. திருமண அன்பளிப்புக்கான காசுபணம் கரியானால் கலக்கத்தில் காம்னா காணாமல் போய்விடுவாள். (4,3)

    12. பாழுங்கிணறை சூழ்ந்திருக்கும் கருங்கல். (2)

    ReplyDelete
  5. திரு திரு அவர்களது கருத்து:

    " எளிதாக இருந்தது.. சிறிது கடினப்படுத்தலாமே. "

    ReplyDelete
  6. திரு வடகரை வேலன் அவர்களது கருத்து:

    " இம்முறை எளிமையாக இருந்தது "

    ReplyDelete
  7. திரு ஹரி பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " எல்லா குறிப்புகளும் அருமை. 12கு, 13கு குறிப்பாக ரசித்தேன். "

    ReplyDelete
  8. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    "Super! "

    ReplyDelete
  9. திரு தமிழ் அவர்களது கருத்து :

    " அருமை எளிமை "

    ReplyDelete
  10. திரை குறுக்கெழுத்துப் புதிர் - 7 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    2. சுரேஷ் பாபு
    3. K.R.சந்தானம்
    4. யோசிப்பவர்
    5. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    6. முத்து சுப்ரமண்யம்
    7. ராமையா நாராயணன்
    8. C.அருந்ததி
    9. பாலாஜி
    10. மாதவ் மூர்த்தி
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. சாந்தி நாராயணன்
    13. திரு
    14. மீனாட்சி சுப்பிரமணியன்
    15. மாதவன் வரதாச்சாரி
    16. பவளமணி பிரகாசம்
    17. சௌதாமினி சுப்பிரமணியம்
    18. வடகரை வேலன்
    19. ஹரி பாலகிருஷ்ணன்
    20. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    21. நாகமணி ஆனந்தம்
    22. ஸ்ரீதரன் துரைவேலு
    23. தமிழ்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete