Sunday, March 23, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 8


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 8

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் சில திரைப்படங்களின் தலைப்புகள் பெண்களின் பெயர்களாகவும், ஒரு திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலச் சொல்லாகவும் இருக்கும்.


குறுக்காக:


5. ஊருக்கு வித்தகர் சத்தம் போட இயலாமல் தவிக்கவைத்த பறவை (6)

6. சுவை நிறைந்ததொரு சிற்றுண்டி (2)

7. தமிழுக்கு சிகரமான அக்கிரகாரம் (4)

9. ஓரெழுத்து வேற்றுமையில் அரசனும் அரசியும் (2,2)

10. தமிழகத்து முதல் பெண் டிஜிபியாக குறுகிய காலத்தில் மாறியவர் (4)

12. சிவபூஜைக்கு ஒவ்வாத ஓலைப்பூ (4)

13. நேரம் கிடைக்கும். ஆனால் கிக்கு இருக்காது (2)

14. நாங்க சதம் அடித்தால் பேரொலி கிளம்பும் (6)



நெடுக்காக:


1. முதலாவதாக ஜோதிகாவும், இரண்டாவதாக சூர்யாவும் வந்தால் சிறப்புதான் (2)

2. கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி (4)

3. அரைகுறையாயும் அனுபவித்திராத புனிதமானவள் (4)

4. இசையகம் இல்லாவிடினும் கம்பரால் கூட பாடவரும் இளமை இசை (6)

8. கரிய நிறம் பெற்றவளைக் கண்டு மாத்ருபூதம் கலங்கி பூண்டு உட்கொள்ளவில்லை (6)

11. தங்கமான தேவலோக சுந்தரி (4)

12. தந்தை வழி உறவில் முதல் கரு உருவாகி பிறந்த இடம் (4)

15. காலொடிந்த இளையவனின் மூச்சு (2)

Transliteration scheme:

உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

9 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " ரசித்த குறிப்புகள்:

    5. ஊருக்கு வித்தகர் சத்தம் போட இயலாமல் தவிக்கவைத்த பறவை (6)
    14. நாங்க சதம் அடித்தால் பேரொலி கிளம்பும் (6)
    3. அரைகுறையாயும் அனுபவித்திராத புனிதமானவள் (4)
    4. இசையகம் இல்லாவிடினும் கம்பரால் கூட பாடவரும் இளமை இசை (6) "

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Wonderful clues once again. Keep up the great work. Liked so many of the clues "

    ReplyDelete
  3. திரு அந்தோணி இம்மானுவேல் அவர்களது கருத்து:

    " Most of the clues are very nice. 1d, "

    ReplyDelete
  4. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " Thanks for your interesting puthir. "

    ReplyDelete
  5. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிக நன்றாக இருக்கிறது. 14.குறு மிக ரசிக்கும்படியான புதிர். "

    ReplyDelete
  6. திரு R.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " sanganaatham karuthukku inimai "

    ReplyDelete
  7. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Easy, but nice cluing as usual. பிடித்த குறிப்புகளை underline செய்துள்ளேன்.

    குறுக்காக:

    7. தமிழுக்கு சிகரமான அக்கிரகாரம் (4) (learnt a new word)
    12. சிவபூஜைக்கு ஒவ்வாத ஓலைப்பூ (4)

    நெடுக்காக:

    3. அரைகுறையாயும் அனுபவித்திராத புனிதமானவள் (4)
    4. இசையகம் இல்லாவிடினும் கம்பரால் கூட பாடவரும் இளமை இசை (6)
    11. தங்கமான தேவலோக சுந்தரி (4) (made me think a bit)
    15. காலொடிந்த இளையவனின் மூச்சு (2)

    Congrats. Keep it up. "

    ReplyDelete
  8. திரு தமிழ் அவர்களது கருத்து:

    " அருமை "

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 8 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. சுரேஷ் பாபு
    3. சாந்தி நாராயணன்
    4. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    5. அந்தோணி இம்மானுவேல்
    6. K.R.சந்தானம்
    7. மாதவ் மூர்த்தி
    8. ராமையா நாராயணன்
    9. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    10. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    11. G.K.சங்கர்
    12. சௌதாமினி சுப்பிரமணியம்
    13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    14. மாதவன் வரதாச்சாரி
    15. பாலாஜி
    16. பவளமணி பிரகாசம்
    17. நாகமணி ஆனந்தம்
    18. வடகரை வேலன்
    19. யோசிப்பவர்
    20. தமிழ்
    21. ஹரி பாலகிருஷ்ணன்
    22. C.அருந்ததி
    23. மீனாட்சி சுப்பிரமணியன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete