Thursday, May 1, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 10


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 10

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.
குறுக்காக:


5. கேடு கேட்ட தம்பிகளை அக்காள் மாற்றியது குழந்தைக்காக (6)

6. பேய் பிடித்திருக்கும் ஞானி? (2)

7. குட்டையன் குழப்பிவிட்டான் அரசே (4)

9. பெருந்தலைவரைப் பெற்ற சிதம்பரத்து அம்பிகை (4)

10. தீர்ப்பளிப்பவன் தர்மத்தின் தலைவன் (4)

12. காப்பியமாக உருவாக காரணமான காலணி (4)

13. முதன் முதலில் கோயங்கர் வாழ்ந்த பிரதேசம் (2)

14. மெய்மறந்து வீரமண்ணை ஸ்வரங்கள் இரண்டுடன் கலந்து இசைக்கும் பச்சை யாழ் (4,2)


நெடுக்காக:


1. தூண்கள் இடையில் மறைந்த துகள் (2)

2. வெள்ளி தராசுக்காரன் முகம்மதியனா இல்லை (4)

3. தோற்றத்தின் வசீகரம் தரும் அதிர்ஷ்டம் (4)

4. இனிமையான இசைக்கு அணுகாத மனமும் ஓர் அளவின்றி மயங்கும் (6)

8. குரங்கு வரவால் கதி கலங்கினாலும் கவலை கொள்ளாத மாந்திரீகன் (6)

11. ஸ்ரீ கிரி ஆட்டத்தில் அவல் இன்றி அமருவதில்லை (4)

12. உயிரிழந்தால் பார்க்க சகிக்காத விலங்கு (4)

15. பராக்கிரமசாலியே! மரம் வெட்டி தருவீரா? (2)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

11 comments:

 1. திருமதி பூங்கோதை சீனிவாசன் அவர்களது கருத்து:

  " I enjoyed the crossword very much. Especially the below clues were so beautiful
  - 2 Dn (my favourite), 12 Dn, 5 Ac, 7 Ac. "

  ReplyDelete
 2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

  " Well and wishing you the same. Once again all wonderful clues. Liked almost all the clues. The ones I like the most are
  Across: 5, 7, 14 (all three are exceptional)
  Down: 2, 4, 11, 12 (2, 4 are exceptional)

  Keep up the great work and I am learning a lot from you :) "

  ReplyDelete
 3. 5.குறு அதம் என்பதற்கு கேடு என்றும், 7.குறு
  மன்னவா என்பதற்கு அரசே என்றும் 8.கவல் ஐ கொள்ளாத என்பதை கவலை கொள்ளாத என்றும்
  சொற்களைக் கையாண்ட விதம் மிக அருமை

  2.நெ .காதரா என்பதைக் கையாண்ட விதமும் மிக நன்றாக உள்ளது

  ReplyDelete
 4. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

  " ரசித்த குறிப்புகள்:
  கு. 7,14; நெ. 2, 8 "

  ReplyDelete
 5. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

  " A very good puthir. The clue for 12 Dn is excellent."

  ReplyDelete
 6. திரு வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

  " வழக்கம் போல் எல்லா குறிப்புகளுமே வெகு அருமை.. அளவு பற்றிய குறிப்பு. பலம் ,சேர் வீசை
  எல்லாம் எங்கே இருந்து பிடித்தீர்கள்? மீண்டும் பணி தொடர வாழ்த்துக்கள். "

  ReplyDelete
 7. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

  " Nice cluing as usual. பிடித்த குறிப்புகளை underline செய்துள்ளேன

  குறுக்காக:

  5. கேடு கேட்ட தம்பிகளை அக்காள் மாற்றியது குழந்தைக்காக (6)
  7. குட்டையன் குழப்பிவிட்டான் அரசே (4)
  14. மெய்மறந்து வீரமண்ணை ஸ்வரங்கள் இரண்டுடன் கலந்து இசைக்கும் பச்சை யாழ் (4,2)

  நெடுக்காக:

  2. வெள்ளி தராசுக்காரன் முகம்மதியனா இல்லை (4) (Enjoyed the clue)
  8. குரங்கு வரவால் கதி கலங்கினாலும் கவலை கொள்ளாத மாந்திரீகன் (6)
  11. ஸ்ரீ கிரி ஆட்டத்தில் அவல் இன்றி அமருவதில்லை (4)
  12. உயிரிழந்தால் பார்க்க சகிக்காத விலங்கு (4)

  Congrats and keep it up. "

  ReplyDelete
 8. திரு ஸ்ரீதரன் துரைவேலு அவர்களது கருத்து:

  " Quite good "

  ReplyDelete
 9. திரு அந்தோணி இம்மானுவேல் அவர்களது கருத்து:

  " Singam, Goa, viiraa are superb. "

  ReplyDelete
 10. திரு தமிழ் அவர்களது கருத்து:

  " அருமையான புதிராக்கம் "

  ReplyDelete
 11. வணக்கம் நண்பர்களே,

  திரை குறுக்கெழுத்துப் புதிர் - 10 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

  1. பூங்கோதை சீனிவாசன்
  2. சௌதாமினி சுப்பிரமணியம்
  3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
  4. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
  5. ராமையா நாராயணன்
  6. முத்து சுப்ரமண்யம்
  7. K.R.சந்தானம்
  8. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
  9. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
  10. சாந்தி நாராயணன்
  11. பாலாஜி
  12. மாதவ் மூர்த்தி
  13. பவளமணி பிரகாசம்
  14. G.K.சங்கர்
  15. தமிழ்
  16. மாதவன் வரதாச்சாரி
  17. மீனாட்சி சுப்பிரமணியன்
  18. ஸ்ரீதரன் துரைவேலு
  19. நாகமணி ஆனந்தம்
  20. அந்தோணி இம்மானுவேல்
  21. C.அருந்ததி

  விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

  ReplyDelete