Sunday, July 20, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 13


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 13

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒரு ஆங்கிலச் சொல்லும், இரண்டு பெயர்களும் உண்டு.


குறுக்காக:


3. முதன் முதலில் லட்சுமி, ஜானகி, ரேவதி, ரோகிணி, மல்லிகா இவர்கள் கலந்து கட்டிய பூ தான்! (2,3)

6. கோபம் உள்ளவரோடு இருக்கிற தழும்பு மறையும்படியான மாற்றம் தகும் (4)

7. உத்தரவு இட்டவர்களை எப்படியாவது இவர் துரத்தி விடுவார் (4)

8. சாரதா தவம் செய்து விளக்கும் திருமால் பெருமை (6)

13. நாக்கு வறண்டதால் நானாக திரும்பிப் பார்த்தேன், எனக்கொரு கனவு வந்தது (2,4)

14. சுழன்றதெல்லாம் நடுவில் சுகமான காற்றாக மாறியது (4)

15. மொகலாயருடன் போரிட்ட மகாராணா வீரப்பிரதாபன் சந்தனம் கடத்தியவனைக் கொன்று கடைசியில் நாட்டைப் பிடித்தான் (4)

16. சிறப்பாகவும் ஒன்றன்பின் ஒன்றாகவும் பெண்ணைப் பெற்றவர் செய்வார். (5)

நெடுக்காக:


1. ஆரம்பத்தில் சரிந்து உட்கார முடியாத லைலா ஒரு காவியத்தின் தலைவி ஆனாள். (5)

2. மூலதனம் குறைவாகப் போடுபவன் தலைவன் (5)

4. ஜனனக் குறிப்பு கணிக்க ஜாதி, மதம் கடைசியில் சேர்க்க வேண்டும். புத்தி தேவையில்லை (4)

5. உலகையாண்டவன் சந்தோஷமாயில்லாத நகரம் (4)

9. மாமணி சச்சின் விருது இந்திய தேசத்ததல்ல (3)

10. மகாராணியை முதலில் பெற்றவள் பூமாதேவி. மற்றவளல்ல. (5)

11. குற்றத்தைப் பொருத்தருள எவ்வழியிலும் கருப்பு மனிதன் எண்ண மாட்டான் (5)

12. வடக்கே சென்றுவிட்ட டாக்டர் கேசவன் ஒருவிதத்தில் நடனமாடுபவர் கூட (4)

13. நங்கநல்லூரில் பாதி கல்விக்கூடம் தான் (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

13 comments:

  1. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Another excellent crossword. As one who has been solving good English cryptic crosswords I admire the ease with which you follow the rules of a good crossword, Liked all the clues.

    1. ஆரம்பத்தில் சரிந்து உட்கார முடியாத லைலா ஒரு காவியத்தின் தலைவி ஆனாள் (5) (enjoyed the clue)
    2. மூலதனம் குறைவாகப் போடுபவன் தலைவன் (5) (very nice)
    6. கோபம் உள்ளவரோடு இருக்கிற தழும்பு மறையும்படியான மாற்றம் தகும் (4) Nice "

    ReplyDelete
  2. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " Liked all clues. Very fittingly coined. "

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிகவும் பிடித்தது: 1 நெடுக்கு "

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    "quite challenging. சவாலான புதிர் . பாராட்டுகள் 1 நெடு பாடாய் படுத்திவிட்டாள். "

    ReplyDelete
  5. திரு யோசிப்பவர் அவர்களது கருத்து:

    " ரசித்த குறிப்பு - 7 குறு: உத்தரவு இட்டவர்களை எப்படியும் இவர் துரத்திவிடுவார். "

    ReplyDelete
  6. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " 6 குறு: மிக அருமை "

    ReplyDelete
  7. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Wonderful clues as usual. 1 down made me to think a little bit and the same with 10 down. "

    ReplyDelete
  8. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " All clues are nice. Liked 6 Across."

    ReplyDelete
  9. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    "வழக்கம் போல் குறிப்புகள் அனைத்துமே அருமை. சிலது எனக்கு போதுமானதாக இல்லை "

    ReplyDelete
  10. திரு தமிழ் அவர்களது கருத்து:

    " அருமையான புதிராக்கம்! "

    ReplyDelete
  11. திருமதி பூங்கோதை சீனுவாசன் அவர்களது கருத்து:

    " each and every clue was such a gem! enjoyed very much.

    definition , wordplay , surface - everything was too good!

    குறைவாக போடுபவன், வடக்கே சென்றுவிட்ட, நங்கநல்லூரில் பாதி, இவர் துரத்தி விடுவார் and almost all charades were just too good! "

    Thank you,
    Poongothai

    ReplyDelete
  12. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    " Fine! "

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 13 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    2. K.R.சந்தானம்
    3. முத்து சுப்ரமண்யம்
    4. சாந்தி நாராயணன்
    5. மாதவ் மூர்த்தி
    6. ராமையா நாராயணன்
    7. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    8. யோசிப்பவர்
    9. சௌதாமினி சுப்பிரமணியம்
    10. C.அருந்ததி
    11. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    12. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    13. G.K.சங்கர்
    14. ஸ்ரீதரன் துரைவேலு
    15. தமிழ்
    16. பவளமணி பிரகாசம்
    17. நாகமணி ஆனந்தம்
    18. பூங்கோதை சீனிவாசன்
    19. வடகரை வேலன்
    20. மாதவன் வரதாச்சாரி

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    சில நண்பர்கள் திரை குறுக்கெழுத்துப் புதிர் பற்றிய தங்கள் கருத்துக்களையும், எந்தெந்த குறிப்புகள் மிகவும் பிடித்திருந்தன என்பதையும் எழுதியனுப்பியிருந்தார்கள். அவர்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் வெளியிட்டிருக்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் நன்றி.

    ReplyDelete