Saturday, December 20, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 18


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 18

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒரு ஆங்கிலச் சொல்லும் உண்டு.


குறுக்காக:


5. உட்காராமல் சென்றுவிட்ட ராமன் அளவில்லாது அம்பெய்வதில் திறமைசாலியாக மாறிடுவான் (5)

6. நாகிரெட்டியின் நிறம் (2)

7. வாரக்கடைசி நாளில் குளித்தலை சென்ற தந்திரக்காரன் (3)

8. அவ்விடம் கரைகளில் சங்கமம் ஆன தோட்டி (5)

11. ஸ்வரம் குறைந்து பொங்குதலால் தடுமாறி செய்த குற்றம் (5)

12. இடையிடையில் வசிஷ்ட் வாயால் ஆசீர்வதிக்கப்பட்ட சீடனே! (3)

14. முதன் முதலில் சிறை வாசமா ஆண்டவா! (2)

15. நடுவில் தந்து விட்டுப்போன பூந்தேன் சிதறவிட்ட ரத்தினம் (5)


நெடுக்காக:


1. சரோஜினி நாயுடு புலவனுக்கு உயில் எழுதியபின் உயிரைவிட்டார் (6)

2. கொழுப்பு அதிகம் இருக்கும் புலாலை நடுவில் தின்றால் பிணக்கட்டிலில் விழ நேரும் (3)

3. தனக்கு இளையவளை அறிமுகப்படுத்தும் விதம் (2,3)

4. நடு வீட்டு அறையில் குழுமியிருக்கும் கும்பல் (4)

9. கொஞ்சம் அதிகமாகவே புஷ்பா சபித்ததும் ஒருவகையில் நல்லது பையா (3,3)

10. நடுநிலையில் நாங்கள் எல்லைகளை கடந்து ஒன்றுசேர்வோம் (5)

11. பாறையில் செதுக்கிய உருவத்தின் தலையை மாற்றிய தங்கப்பதுமை (4)

13. இடையில் பலம் குறைந்தாலும் சிறுவன் தேர் கூட ஓட்டுவான் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    "Nice clues,particularly 1d and 11d "

    2d beats me "

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Excellent clues and wondering how you were able to come up with them. Show the experience and your love towards making these wonderful crosswords. Keep up the great work-nga sir. "

    ReplyDelete
  3. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " ஈர்த்தவை: 11 கு, 10 நெ "

    ReplyDelete
  4. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " எல்லாக் குறிப்புகளுமே மிக நன்றாக உள்ளன."

    ReplyDelete
  5. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    " Fine! "

    ReplyDelete
  6. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " All clues are excellent "

    ReplyDelete
  7. திரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்து:

    " As always, an enjoyable puzzle with excellent clues."

    ReplyDelete
  8. திரு தமிழ் அவர்களது கருத்து:

    " அருமையான புதிராக்கம்!! "

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 18 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பவளமணி பிரகாசம்
    2. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    4. முத்து சுப்ரமண்யம்
    5. K.R.சந்தானம்
    6. ராமையா நாராயணன்
    7. பாலாஜி
    8. மாதவ் மூர்த்தி
    9. நாகமணி ஆனந்தம்
    10. சாந்தி நாராயணன்
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. தமிழ்
    13. ஸ்ரீதரன் துரைவேலு
    14. சௌதாமினி சுப்பிரமணியம்
    15. சுரேஷ் பாபு

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete