Friday, March 6, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 20


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 20

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.


குறுக்காக:


3. கருப்பு நிற துணியும் அரைகுறையாய் வெளுக்கப்பட்டால் வரும் நீண்டகாலம் (5)

6. அரசி அரசன் பாடத்தில் பாட்டு இடம் பெறவில்லை (4)

7. நிறம் மாற்றி தருபவர் பணம் 50 சதவீதம் கரையும் (4)

8. நீதிக்கடவுள் வெண்ணெய் இன்றி, தள்ளாடி தள்ளி அமர்வதேன்? (6)

13. சாரப்பள்ளம் சாமுண்டி சிலை செதுக்கும் ஒலி (4,2)

14. நாம் தினம் அரங்கனை சுற்றுவோம். சிவனை அல்ல (4)

15. அபராதம் தந்து உண்டவனை மகிழ்ச்சியுடன் ஒதுக்கிவிடலாம் (4)

16. வீட்டு எஜமானி பெயரில் மாதமும் மூலதனமின்றி உருளும் (5)


நெடுக்காக:


1. ராம் தப்பி செல்ல உதவிய விதி (5)

2. காலிழந்த உன்மத்தன் சற்குணனாக மாறினான் (5)

4. கூட இருப்பவன் இணைவதுதான் ரொம்பவும் நல்லது (4)

5. பாதி கங்கையின் கரைகளில் வர்ணம் பாதி சிந்திய கொடையாளி (4)

9. கல்கியின் படகோட்டி மனைவி கடைசி நாள் காற்றில் மிதந்தாள் (3)

10. தங்க சுரும்பு சுற்றிவந்து கொட்ட இயலாத பொட்டு கொண்டவன் (5)

11. விருப்பத்துடன் கட்டிகிட்டவள் ஆன்மா ஒரு கிருஸ்தவனை வட்டமிடுகிறது (5)

12. மங்காத சிரிப்பில் மயங்கி அலங்கரித்தவள் சந்தோஷத்தில் இல்லை (4)

13. மனம் இருக்கிற நிலையிலும் முடியும் (4)

b>Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

9 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    "ஈர்த்தவை: 15, 16, 11, 12 "

    ReplyDelete
  2. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " எல்லாக் குறிப்புகளுமே மிக நன்றாக உள்ளன. "

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    "Excellent and thought-provoking clues. As I mentioned earlier, your cluing is almost the same as Vanchi’s. "

    ReplyDelete
  4. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " எல்லாமே அருமையான குறிப்புகள். ஆனால் பல்லை உடைக்கும் கடினம் "

    ReplyDelete
  5. திருமதி சௌதாமினி சுப்பிரமணியம் அவர்களது கருத்து:

    " very much appreciated the clue for "AAsaiManaivi" "

    ReplyDelete
  6. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Very very nice clues once again. Keep up the great work "

    ReplyDelete
  7. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    " Fine! "

    ReplyDelete
  8. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " At the first reading the clues looked tough. "

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 20 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    3. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    4. ராமையா நாராயணன்
    5. மாதவ் மூர்த்தி
    6. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    7. சௌதாமினி சுப்பிரமணியம்
    8. சாந்தி நாராயணன்
    9. பாலாஜி
    10. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    11. தமிழ்
    12. பவளமணி பிரகாசம்
    13. நாகமணி ஆனந்தம்
    14. K.R.சந்தானம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete