Monday, April 20, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 22


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 22

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒரு ஆங்கிலச் சொல்லும் உண்டு.


குறுக்காக:


3. தென் அமெரிக்க நாடு முதலில் சுற்றிய கிராமத்து பெரிய மனிதர் (3)

5. ராணுவம் பாதியாக குறைந்து கலைந்தது போரின் மிரட்டலினால் (5)

6. தீமையினால் நெருப்பில் கருகிவிட்ட பறவை (2)

7. நவம்பர் மாதத்தில் பெயர் மாறிய நாடு (3)

8. கடக்க வந்ததும் கொடுத்து விட்ட கூத்து (5)

11. மகுடிக்காரன் ஆணைப்படி கலங்கிய பசு பாடும் பேச முடியாது (2,3)

12. கூச்சப்படும் புல்? (3)

14. ஆயுதம் இன்றி மீள்வாரா இந்த பக்தை? (2)

16. அப்பா உயிர் போனபின் துயரப்படுபவன் ஏந்திய ஆயுதம் (5)

17. தாவ முடியாத ஒருவகைமான் சூடும் மலர் (3)


நெடுக்காக:


1. புகுந்த இடம் சிலருக்கு சிறைச்சாலை? (4,2)

2. படகோட்டியதில் பிடித்த பைத்தியம் (3)

3. மூத்தவன் கண்ணாயிரம் பெயரில் மறைத்தது பாதி கலைத்தது மீதி (5)

4. 180 தேங்காய் என்றால் அதிக பாரம் (2)

9. அரைகுறையாய் உடைந்த கிண்ணத்தை தூக்கி காற்றில் எறிந்த பறவை (6)

10. இளைய அதிகாரி நிலத்தில் கருவண்டு மயங்கி விழுந்தது (5)

13. அண்டை நாட்டவன் கூர்க்கா பேசும் பாஷை? (3)

15. முதன் முதலில் ராகத்துடன் தாளத்தை சேர்த்து கண்ணனை கவர்ந்தவள் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

8 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிக ரசித்த குறிப்புகள்: 8, 16, 3, 10 "

    ReplyDelete
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவார்களது கருத்து:

    " Great puzzle

    I LOVED 11a, 16a, 1d 12a and17a "

    ReplyDelete
  3. திரு சந்தானம் ராமரத்தினம் அவர்களது கருத்து:

    " Thanks for a good crossword with excellent clues, "

    ReplyDelete
  4. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    1. 1. நெடு, நல்ல ஒரு நகைச்சுவையான குறிப்பு
    2. எப்பொழுதும் போல் symmetry தவறாத, ஒரு குறுக்கெழுத்து இலக்கணம் கூட தவறாத குறிப்புகள்
    3. காற்றைக் குறிக்க வளி நல்ல ஒரு மாற்றுச் சொல்
    8. குறு நல்ல ஒரு குறிப்பு

    ReplyDelete
  5. திரு தமிழ் அவர்களது கருத்து:

    " அருமையான புதிராக்கம் !! "

    ReplyDelete
  6. திரு G.K. சங்கர் அவர்களது கருத்து:

    " Thanks for the nice crossword! "

    ReplyDelete
  7. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Excellent.Enjoyed all the clues "

    ReplyDelete
  8. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 22 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பவளமணி பிரகாசம்
    2. முத்து சுப்ரமண்யம்
    3. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    4. K.R.சந்தானம்
    5. சாந்தி நாராயணன்
    6. ராமையா நாராயணன்
    7. தமிழ்
    8. பாலாஜி
    9. மாதவ் மூர்த்தி
    10. பொன்சந்தர்
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. G.K.சங்கர்
    13. சௌதாமினி சுப்பிரமணியம்
    14. ஸ்ரீதரன் துரைவேலு

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete