Friday, November 20, 2015

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 29


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 29

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம் அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5., 3 நெடு, 14 நெடு: தனியாக நிற்பதால் கால் வலிக்கும். கலங்கி பாதியில் போகாதே, பார்த்து ஆசைப்படு (2,3,3)

6. காற்றாடியில் திருப்பிக் கோடு போட்டால் கிடைக்கும் மரியாதைக்கான முண்டாசு (6)

7. தினம் மதிப்பெண் குறைந்தால் வருந்தும் மங்கை உள்ளம். (2,3)

8. மற்ற யானைகளை அடக்கும் கிழட்டு யானை (3)

10. மென்மையாக பேசிய வங்கத் தலைவர்? (3)

12. அவ்வாறின்றி எவ்வாறேனும் நடிப்பவன் அல்ல சிறந்தவன் (5)

15. செங்கற் பொடியால் செந்நிறமான பூமி? (6)

16. மேகங்களின் திரட்சி தரும்; வேளாளர்க்கு மகிழ்ச்சி வரும் (2)



நெடுக்காக:


1. கம்பம் கண்ணில் தூசி விழுந்தால் துர்நாற்றம் அகலும். (4)

2. கோமாதா திரும்பிப்பார்த்தால் அன்றாடம் நல்லநாள் (5)

3. 5 குறு: பார்க்கவும்

4. தீண்ட வரும் தலைவலி போனால் மீண்டும் வரும் (4)

9. பார்த்து பாறை உடைத்தால் இனிக்கும் (5)

11. பாதாளத்தில் போய் அவசரத்தில் பாலை கலக்கினாலும் அன்புப்பிடிப்பு இருக்கும் (4)

13. தீராப்பகை கொண்டு ஆயுதமின்றியே உக்கிரமாக அம்மன் வருவாள் (4)

14. 5 குறு: பார்க்கவும்


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " மிகவும் ரசித்தவை: 6, 12, 2, 4 "

    ReplyDelete
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " Nice clues. 6 across is superb. "

    ReplyDelete
  3. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    " மிக எளிதாகவும், தெளிவாகவும், ரசிக்கும்படியாகவும் உள்ளன. "

    ReplyDelete
  4. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " As expected, an interesting & challenging puzzle. I am amazed that you can continue to give thematic crosswords without any drop in quality. "

    ReplyDelete
  5. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " Nice crossword. "

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 29 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    3. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    4. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    5. ராமையா நாராயணன்
    6. மாதவ் மூர்த்தி
    7. சௌதாமினி சுப்ரமண்யம்
    8. சுரேஷ் பாபு
    9. சாந்தி நாராயணன்
    10. பொன்சந்தர்
    11. பாலாஜி
    12. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    13. K.R.சந்தானம் பத்மஸ்ரீ
    14. G.K.சங்கர்
    15. பவளமணி பிரகாசம்
    16. ஸ்ரீதரன் துரைவேலு

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete