Monday, December 18, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 52


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 52

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. புயலில் விட்டுவிட்டு வந்த விலங்கு (2)

6. அன்புக்காணிக்கை அளிக்க விருப்பம் இன்றி அலைந்து பிரிதல் சுபகாரியம் (3,3)

7. 2 நெடு: பார்க்கவும்

8., 11 நெடு: கால்கட்டு போட கழுத்துக்கு போடும் கட்டுகள் (3,4)

10. இந்தப்பெண் கேட்பது படையலா? (3)

12. கையிழந்த நங்கை பொறாமை நாவாயை நகர விடாது (5)

15. ஆங்கிலத்தில் கல்வி போதிப்பவரைப் பெற்றவள் கூட அன்பான ஆசிரியை (6)

16. கூச்சலிடுவதில் கொஞ்சமாகவே ஊதியம் கிடைக்கும் (2)


நெடுக்காக:


1. பண்டைய தேசம் சார்ந்த அஞ்சலி புனித ஆற்றில் மூழ்கினாலும் பயப்பட மாட்டாள் (4)

2, 7 குறு: சம வேறுபாட்டில் மாத்ரி புத்திரனும், மகேஸ்வரனும் (5,5)

3, 14 நெடு: சுப முகூர்த்தத்துக்கு உகந்த வேளை (3,3)

4. சூனியக்காரியின் மாயையில் அரைகுறையாய் சிக்கிய ரவி (4)

9. எங்களது உறவினர் மாமாங்கம் என்பதை அனேகமாக சரியாகச் சொல்லிவிடுவார் (3,2)

11. 9 குறு: பார்க்கவும்

13. பெரும்பாலும் கூடாரங்களின் அழிவில் உருவான ந்கரம் (4)

14. 3 நெடு: பார்க்கவும்

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Another excellent crossword.

    With you & Vanchi I learn new words. Today I learnt that
    கூரம் means envy.

    Keep it up.

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    Wonderfully frames clues as usual.

    Keep up the great work and thank you so much for keeping us all entertained with your great work. I know how hard it is for you to come up with the clues. Well done and keep it up.

    ReplyDelete
  3. எப்பொழுதும் போலவே இன்னுமொரு மிகச் சிறந்த தமிழ்ப் புதிர். தெளிவான குறிப்புகள், சரியான பொருளுடைய வாக்கிய அமைப்பு . சமச்சீர் கட்டங்களைப்பு. நன்றி. ஒவ்வொரு மாதமும் 20 தேதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. திருமதி சுதா ரகுராமன் அவர்களது கருத்து:

    " மிகவும் அற்புதம் "

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    sulabamaana kuRippukaL

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 52 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. முத்து சுப்ரமண்யம்
    2. மாதவ் மூர்த்தி
    3. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    4. சௌதாமினி சுப்ரமண்யம்
    5. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    6. சுரேஷ் பாபு
    7. சாந்தி நாராயணன்
    8. ராமையா நாராயணன்
    9. ஆனந்தி ராகவ்
    10. சுதா ரகுராமன்
    11. பாலாஜி
    12. ஆர்.வைத்தியநாதன்
    13. K.R.சந்தானம்
    14. பொன்சந்தர்
    15. G.K.சங்கர்
    16. ஸ்ரீதரன் துரைவேலு

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete