Tuesday, October 20, 2020

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 88


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 88

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. நெஞ்சில் முன்னிருப்பவர் இணைய நீடித்ததில் பெரும்பாலும் குழப்பம் (6,1)

6. பெண்ணே! திரும்பவும் கோபமா? (3)

7. முருகன் இடையில் சூடம் சுற்றும் கவிஞன் (5)

10. குளித்தலை மாட்டின் தாக்குதலுக்குள்ளான விலங்கின் இளமை (5)

11. 12 நெடு: பார்க்கவும்

13. ராஜாவின் ரசிகைக்காக பெரிதும் அலைபவன் தொட்டதெல்லாம் துலங்கும் அருள் பெற்றவன் (7)


நெடுக்காக:


1. முருகக்கடவுள் சாஸ்திர மானிடன் (6)

2. மோட்சம் அடைந்த சிறிய தாய் (3)

3. உடல் பாழாகும்படி ரொம்பவும் வருத்தி செலுத்தும் நேர்த்திக்கடன் (5)

4. உயிர் மெய்யன் மெச்சுதலை விட்டு பார்ப்பான் (4)

8. பிறர்க்கு உதவியது கடைமுத்திரை நீக்கிவிட்டு வடிவமைக்கப்பட்ட பரம்பரை காரோ? (6)

9. பெண்சிங்கம் காண்பி அரசி! (5)

10. எதிரி தோற்றால் தோலுரிக்க வட்டமிடும் மிருகம் (4)

12, 11 குறு. பாதி பதக்கத்தை பரிசளிக்க முயன்ற பெண் துறவி (3,3)




Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு ஆர. வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    rasiththadhu

    8 across

    ReplyDelete
  2. திரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்து:

    "As always, a challenging and interesting puzzle. Congrats
    Keep it up."

    ReplyDelete
  3. திரு குணா அவர்களது கருத்து:

    குறுக்காக 6, 7

    நெடுக்காக 1, 4, 10

    ஆகியவை அருமை

    ReplyDelete
  4. திரு ஆர்.நாராயணன் அவர்களது கருத்து:

    உங்களுடைய இந்தப் பெரிய சாதனை மிகவும் பாராட்டும்படி உள்ளது. மாதாமாதம் 20 ம தேதி உங்கள் திரைக்கதம்பம் புதிரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மிகத்தெளிவான மிகமிக ரசிக்கும்படியான குறிப்புகள். இது ஒரு சினிமாப் புதிர் என்பதே தெரிவதில்லை. எல்லா வகையானவையாகவும் உள்ளன. CHARADES, ANAGRAM DELETION ADDITION ETC. வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
  5. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    வழக்கம்போல் சுவையான, சவாலான குறிப்புகள்!

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,  

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 88 க்கு சரியான விடைகளை அனுப்பியிருந்த நண்பர்களது பெயர்கள்:

    1.      சுரேஷ் பாபு 
    2.      பாலாஜி   
    3.      பவளமணி பிரகாசம் 
    4.      குணா
    5.      கோவிந்தராஜன்   
    6.      நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்   
    7.      மாதவ் மூர்த்தி                 
    8.      ஆர். நாராயணன்              
    9.      ஆனந்தி ராகவ்         
    10.     முத்து சுப்ரமண்யம்   
    11.     ஆர்.வைத்தியநாதன் 
    12.     சௌதாமினி சுப்ரமணியம் 
    13.     G.K.சங்கர்  
    14.    பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் 
       
    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete