Wednesday, January 20, 2021

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 91


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 91

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலம் கலந்த சொல.


குறுக்காக:


5. 4 நெடு: பார்க்கவும்

6, 9 நெடு. வள்ளியம்மாளின் புது ஓடுகள் அதிகம் உடைந்ததால் தாவிச் செல்லும் விலங்கினம் (3,3,5)

7. மனிதர் பலரை பூமி விட்டு வெளியேற்றியதால் வாடும் மஞ்சில் விரிஞ்ச பூ (5)

8, 3 நெடு. ரோமானிய ராஜா கைகளில் அரைகுறையாய் சிக்கி சீரழிந்த பூங்கோட்டை (2,3)

10. அறிவில்லாமல் அனுமதி பெற்ற பெண் (2)

11. திருடும் நோக்கில் பூட்டை திறக்க பயன்படும் மாற்றுத் திறவுகோல் (3,2)

14. வைத்தியம் பார்ப்பவள் ஆங்கிலத்தில் பேசுவது (பற்றி) டமாரம் அடிப்பவள் (6)

15. மேகாலயாவில் இசைநயம் கொண்டவள் (2)


நெடுக்காக:


1. மஞ்சுமூட்டம் இருக்கிறது, போர்வைக்குள் மூடிக்கொண்டினி குப்புறப்படு (4)

2. அமாவாசை அபூர்வமதி (5)

3. 8 குறு. பார்க்கவும்

4. அரசனை முன்னும் பின்னும் தப்பிப்போக சொல் (2,2,2)

9. 6 குறு பார்க்கவும்

10. அயோத்திக்குள்ளேயா இருக்கிறாய், நேர்மையற்றவனே! (4)

12. தலைமுறையாக, சாரதா, ருக்மணி, லட்சுமி, தாரணி இவர்களை இணைத்த அழகிய கொடிபோன்ற பெண் (4)

13. அசுர தாக்குதலுக்குள்ளான சர்க்கார் (3)




Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்தவை: 7 கு., 1. நெ

    ReplyDelete
  2. திரு குணா அவர்களது கருத்து:

    குறுக்காக 5, 7, 8

    நெடுக்காக 2, 3, 4

    ஆகியவை அருமை

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Another interesting one. I am amazed that you are able to compile challenging puzzles on a theme for nearly 8 years. Congrats.

    Thought I would solve this time on the first day.

    Keep up the good work.

    ReplyDelete
  4. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    As usual nicely formed wonderful clues.

    ReplyDelete
  5. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Interesting clues.

    ReplyDelete
  6. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    Odu Raja Odu made me run here and there for more clues

    ReplyDelete