இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
விடைகளில் ஒரு திரைப்படத்தின் தலைப்பு ஆங்கிலச் சொல்லாக இருக்கும்.
|
|
குறுக்காக:
5. இளையவன் தமையனை பிறருக்கு அறிமுகப்படுத்தும் விதம் (2,4)
6. மொரிஷியஸ் தீவுகளில் வாழும் முனிவர் (2)
7. வையம் நடுவில் உறைபனி மூடிய உயர்ந்த மலை (4)
9. மதிவாணன் மயங்கியதால் இறுதியில் காண முடியாத விண்ணிலவு (4)
10. மதுரைப்பூக்காரி மூத்தமகனின் காலில் தலைகுப்புற விழுந்தாள் (4)
12. மன்னர் தலைவன் துரைராஜன் காலொடிந்ததில் கலங்கினான் (4)
13. மௌனமாயிருப்பாளா துர்க்கை? (2)
14. குடியை விட்டதால் நமது கலை தரம் மாறுபட்டு உயர்ந்த ஊர் (6)
நெடுக்காக:
1, 2. கடைக்கு போனால் கிடைக்கும், கண்ணன் ஆரம்பத்தில் தேடி அலைந்த மதுக் கோப்பை (2,4)
2. 1 நெடு: பார்க்க
3. விரும்பியவனை அழை. குறைவாகவே அவன் பேசுவான் (3,1)
4. சிவகங்கைச்சீமை வீரன் குழப்பத்தில் முதல் மரியாதையை கௌரவத்துக்காக விட்டுக் கொடுத்தது பெருமதிப்புக்குரியது (3,3)
8. முடியாத ஒன்றை செய்ய திரிக்கும் பொடிமண் வடம் (3,3)
11. கவர்ந்திழுக்கும் காந்தி மதம் மாறியது புத்தியில்லாததால் (4)
12. நடராஜன் கடை சேதமடைந்தாலும் கடன் இல்லாமல் கம்பீரமாக நடக்கிறது (4)
15. விருப்பமின்றி அரவான் எடுத்த ஓட்டம் (2)
Transliteration scheme:உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
திரு R.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete" aravaan eduththa Ottam aRumai"
திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:
ReplyDelete" எளிதாக, ஆனால் வழக்கம் போல் சிறப்பாக இருந்தது. பிடித்த குறிப்புகள்:
7. வையம் நடுவில் உறைபனி மூடிய உயர்ந்த மலை
10. மதுரைப்பூக்காரி மூத்தமகனின் காலில் தலைகுப்புற விழுந்தாள்
3. விரும்பியவனை அழை. குறைவாகவே அவன் பேசுவான்
4. சிவகங்கைச்சீமை வீரன் குழப்பத்தில் முதல் மரியாதையை கௌரவத்துக்காக விட்டுக் கொடுத்தது பெருமதிப்புக்குரியது
12. நடராஜன் கடை சேதமடைந்தாலும் கடன் இல்லாமல் கம்பீரமாக நடக்கிறது "
" மிக்க நன்றி. " - ராமராவ்
திரு முத்துசுப்ரமண்யம் அவர்களது கருத்து;
ReplyDelete" மிக ரசித்த குறிப்புகள்:
9. மதிவாணன் மயங்கியதால் இறுதியில் காண முடியாத விண்ணிலவு (4)
10. மதுரைப்பூக்காரி மூத்தமகனின் காலில் தலைகுப்புற விழுந்தாள் (4) (அதிகம் யோசிக்க வைத்தது!!)
3. விரும்பியவனை அழை. குறைவாகவே அவன் பேசுவான் (3,1)
4. சிவகங்கைச்சீமை வீரன் குழப்பத்தில் முதல் மரியாதையை கௌரவத்துக்காக விட்டுக் கொடுத்தது பெருமதிப்புக்குரியது (3,3)
11. கவர்ந்திழுக்கும் காந்தி மதம் மாறியது புத்தியில்லாததால் (4) "
திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:
ReplyDelete" Wonderful clues as usual. Migavum rasiththa kurippugal keelae.
Kurukkaaga - 9, 10, 14
Nedukkaaga - 1, 2, 3, 4, 8, 11, 15
Keep up the good work."
திரு G.K. சங்கர் அவர்களது கருத்து:
ReplyDelete" All clues are nice. Like 12 down very much. Thank you! "
திரு வடகரை வேலன் அவர்களது கருத்து :
ReplyDelete" அருமை"
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDelete" Appreciated clues 12 & 15 down very much."
திரை குறுக்கெழுத்துப் புதிர் - 6 க்கு வழக்கமாக விடைகளை அனுப்பும் நண்பர்களும், புதிதாக 4 நண்பர்களும் (திரு, தமிழ், மீனாட்சி சுப்ரமணியன், பாலாஜி) சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
ReplyDelete1. திரு
2. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
3. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
4. முத்து சுப்ரமண்யம்
5. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
6. K.R.சந்தானம்
7. சுரேஷ் பாபு
8. தமிழ்
9. பவளமணி பிரகாசம்
10. ராமையா நாராயணன்
11. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
12. சாந்தி நாராயணன்
13. மாதவ் மூர்த்தி
14. C.அருந்ததி
15. நாகமணி ஆனந்தம்
16. மீனாட்சி சுப்பிரமணியன்
17. ஸ்ரீதரன் துரைவேலு
18. பாலாஜி
19. மாதவன் வரதாச்சாரி
20. G.K.சங்கர்
21. வடகரை வேலன்
22. யோசிப்பவர்
23. சௌதாமினி சுப்பிரமணியம்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.
திரு தமிழ் அவர்களின் கருத்து:
ReplyDelete" புதிர் பற்றிய என் கருத்து:
தூய நாளின் முதலும் முடிவும், பொடி(2) = தூள் !!!! :))) "