Tuesday, January 28, 2014

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 5

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 5

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

விடைகளில் ஒன்றிரண்டு திரைப்படங்களின் தலைப்புகள் ஆங்கிலச் சொற்களாக இருக்கும்.

குறுக்காக:

5. ஏகலைவன் வேதனை கொள்ளாதது எதற்கு? (2)
6. ஓரெழுத்து வேறுபாட்டில் இளைஞனும் இளம்பெண்ணும் (3,3)
7. தானம் செய்பவர் அதிகமாக வாழும் தகடூர்? (5)
8. ஒரு குஸ்தி மாஸ்டர் மறைந்தாலும் உயர்ந்தவர் (3)
11. கரம் பட்ட அதிர்ஷ்டம் கையில் வராத சிலை பாத்திரத்தில் காணவில்லை. (3)
13. மலருக்கேல்லாம் மன்னன் ஆரம்ப பூஜைக்கு ஒரு பொற்காசு மாற்றினான்.  (5)
16. பெரியோரின் பெயர் வைத்துக் கொள்ளாத பாபநாச மாமா திருமணம் காசுக்கும் அன்புக்குமான போராட்டமாக மாறியது (3,3)
17. அப்பாவி துறவி (2)

நெடுக்காக:

1. ஜெயித்தவர் விண்ணுக்கு மன்னர். மண்ணுக்கு அல்ல (4)
2. கடவுள் கைவிட்ட ஆண்பாம்பு வலியுடன் கலங்குவதால் சீறும் கொடிய மிருகம் (3,2)
3. கேட்பதற்கு டெனிம் சல்லடம் மாதிரி  ஒலிக்கும் மரபணுக்கள் (3)
4. கலகம் விளைவித்த வஸ்தாதே பார்வதியின் காதலன் (4)
7. தன பங்கை கொஞ்சம் விட்டுக் கொடுக்கும் உடன்பிறப்பு (3)
9. உழும் நிலமாகி விட்டதால் திவாலாகியவன் ஓர் அதிகாரி (3)
10. மயிரிழந்தால் உயிர் துறக்கும் விலங்கு (5)
12. கற்புக்கரசியை கவர்ந்துசென்றவன் கவன குறைவால் கலங்கியதால் கணவரானவன் (4)
14. இல்லறவாசி நுழைய அனுமதிக்காது அபூர்வ சாகசம் புரி (4)
15. சபா கோஷ்டி பெருந்தொகை இழந்தது மிக நல்லது (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ

நகல் அனுப்புக

13 comments:

  1. திரு R.வைத்தியநாதன் அவர்களது கருத்து:
    "Absorbing"

    ReplyDelete
  2. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:
    "Thanks for your thought provoking puthir."

    ReplyDelete
  3. திரு யோசிப்பவர் அவர்களது கருத்து:
    "Really a GREAT Show. I enjoyed most of the clues this time. Though I couldnt understand few clues completely, I got the answer."

    ReplyDelete
  4. திரு முத்து அவர்களது கருத்து:

    "அருமையான பணி தொடரட்டும்!

    மிகவும் ரசிக்கும் படியாக இருந்தவை:
    16. பெரியோரின் பெயர் வைத்துக் கொள்ளாத பாபநாச மாமா திருமணம் காசுக்கும் அன்புக்குமான போராட்டமாக மாறியது (3,3)
    14. இல்லறவாசி நுழைய அனுமதிக்காது அபூர்வ சாகசம் புரி (4)
    13. மலருக்கேல்லாம் மன்னன் ஆரம்ப பூஜைக்கு ஒரு பொற்காசு மாற்றினான். (5)

    அதிக நேரம் சிந்திக்க வைத்தவை:
    8. ஒரு குஸ்தி மாஸ்டர் மறைந்தாலும் உயர்ந்தவர் (3)
    4. கலகம் விளைவித்த வஸ்தாதே பார்வதியின் காதலன் (4)

    கவி நயம் மிகுந்தது:
    12. கற்புக்கரசியை கவர்ந்துசென்றவன் கவன குறைவால் கலங்கியதால் கணவரானவன் (4)

    திரு முத்து,
    உங்களது கருத்துகளுக்கு மிக்க நன்றி - ராமராவ்

    ReplyDelete
  5. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    "Wonderful clues as usual. Some of them are exceptional and really liked them very much. Keep up the great work-nga sir"

    "And fantastic clues for this one specifically "கேட்பதற்கு டெனிம் சல்லடம் மாதிரி ஒலிக்கும் மரபணுக்கள் "... Great work-nga sir.".

    "பாராட்டுக்கு மிக்க நன்றி" - ராமராவ்

    ReplyDelete
  6. திரு வடகரை வேலன் அவர்களது கருத்து:

    "எளிதாகத்தான் இருக்கு"

    ReplyDelete
  7. திரு வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    "எல்லா குறிப்புகளுமே அருமை. விடையை ஓரளவுக்கு ஊகித்து விட்டு குறிப்புகளுடன் சரிபார்ப்பது சுவாரசியம். சில குறிப்புகள் நிரம்ப சிந்தனைக்கு பிறகு தெளிவாயின"

    ReplyDelete
  8. திருமதி சாந்தி நாராயணன் அவர்களது கருத்து:

    "enjoyed every clue"

    ReplyDelete
  9. திரு சுரேஷ் பாபு அவர்களது கருத்து:

    "அருமையான குறிப்புகள். மிகவும் ரசித்தேன்".

    ReplyDelete
  10. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    "Another வின்னர் for which I'll also say சபாஷ் and ஒஸ்தி.

    Since I feel you're now an accomplished crossword setter, I didn't give detailed feedback. The clues I liked are

    குறுக்காக:

    5. ஏகலைவன் வேதனை கொள்ளாதது எதற்கு? (2)
    8. ஒரு குஸ்தி மாஸ்டர் மறைந்தாலும் உயர்ந்தவர் (3)
    11. கரம் பட்ட அதிர்ஷ்டம் கையில் வராத சிலை பாத்திரத்தில் காணவில்லை. (3)
    13. மலருக்கேல்லாம் மன்னன் ஆரம்ப பூஜைக்கு ஒரு பொற்காசு மாற்றினான். (5)
    16. பெரியோரின் பெயர் வைத்துக் கொள்ளாத பாபநாச மாமா திருமணம் காசுக்கும் அன்புக்குமான போராட்டமாக மாறியது (3,3)

    நெடுக்காக:

    2. கடவுள் கைவிட்ட ஆண்பாம்பு வலியுடன் கலங்குவதால் சீறும் கொடிய மிருகம் (3,2)
    4. கலகம் விளைவித்த வஸ்தாதே பார்வதியின் காதலன் (4)
    9. உழும் நிலமாகி விட்டதால் திவாலாகியவன் ஓர் அதிகாரி (3)
    12. கற்புக்கரசியை கவர்ந்துசென்றவன் கவன குறைவால் கலங்கியதால் கணவரானவன் (4)
    14. இல்லறவாசி நுழைய அனுமதிக்காது அபூர்வ சாகசம் புரி (4)
    15. சபா கோஷ்டி பெருந்தொகை இழந்தது மிக நல்லது (3)

    Keep up the good work."

    " மிக்க நன்றி திரு பார்த்தசாரதி அவர்களே" - ராமராவ்

    ReplyDelete
  11. திரு ராமையா நாராயணன் அவர்களது கருத்து:

    "இந்த முறை மிக எளிதாக இருந்தது. மிக நன்றாகவும், குழப்பம் ஏதும் இல்லாமலும் இருந்தது "

    ReplyDelete
  12. திரை குறுக்கெழுத்துப் புதிர் - 5 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களது பெயர்கள்:

    1. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    2. K.R.சந்தானம்
    3. ஸ்ரீதரன் துரைவேலு
    4. யோசிப்பவர்
    5. C.அருந்ததி
    6. முத்து சுப்ரமண்யம்
    7. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    8. மாதவ் மூர்த்தி
    9. வடகரை வேலன்
    10. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. சாந்தி நாராயணன்
    13. G.K.சங்கர்
    14. சுரேஷ் பாபு
    15. பவளமணி பிரகாசம்
    16. மாதவன் வரதாச்சாரி
    17. ராமையா நாராயணன்
    18. சௌதாமினி சுப்பிரமணியம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete
  13. திருமதி நாகமணி ஆனந்தம் அவர்களது கருத்து:

    "Fine!"

    "விடைகளை அனுப்பியதற்கு நன்றி. பாராட்டுக்கள்." - ராமராவ்

    ReplyDelete