Saturday, February 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 32


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 32

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


5. ஆரம்பத்தில் ரசிக்க தவறிய கேரம் விளையாட்டு (2)

6. மாமிசம் குறைவாக கலந்துண்ட கோபத்தில் மன்னன் அமரும் இருக்கை (6)

7. உயர்மட்ட மக்கள் தலைமயிர் இழந்தால் சகிக்காமல் குமட்டிடுமே! (5)

8. நவராத்திரி சமயத்தில் உதவும் விளையாட்டுப் பொருள் (3)

10. செல்வத்தில் மிதந்து, கொடுத்து விட்டால் மரத்துப்போகும் (3)

12. குழந்தைகள் தும்மினாலோ அல்லது ஒருவரைப்பற்றி நினைக்கையில் அவரே நேரில் வந்தாலோ "நீண்ட நாள் வாழ" சொல்லும் வாழ்த்து (3,2)

15. சிதைந்த காதணி உள்ளடக்கிய அடைக்காயை காலடியில் சமர்ப்பணம் செய்யலாம் (6)

16. சரவணனிடம் பகல்வேளையில் எதிர்ப்படும் (2)


நெடுக்காக:


1. துவண்ட ராசாவாட்டம் இருந்தாலும் வாடமாட்டார் அசோக மன்னனைப் போன்றவர் (4)

2, 3 நெடு: பாரசீக எல்லைகளை கடந்துவிட்டபின் உள்ளே அகப்படும் விலங்கே சுவைக்கும் செல்வந்தனே! (5,3)

3. 2 நெடு பார்க்கவும்

4. மக்கள் இடையே ஞானம் நடுவில் உதயம் (4)

9. தாளத்தில் முறிந்த கையுள் சிக்கினால் வாழ்நாள் முழுதும் சிறைவாசி (3,2)

11. ஆங்கிலேய சோம்பி அருகில் தமிழன் வனப்பில் குறைந்தால் வருந்துவான் (4)

13. தாலி, பெண்ணுக்கு ஒரு மெல்லிழையாலான அரண் போன்றது (4)

14. இரவில் பணி தொடங்காத கொறிணி (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    மிக நன்றாக உள்ளது.திமிரு என்றால் மரத்துப்போவது என்பதும் ,மிருதன் என்று ஒரு சொல் சினிமா உண்டு என்பதும் எனக்கு இது வரை தெரியாது

    ReplyDelete
  2. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    Liked all clues

    ReplyDelete
  3. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    pidiththavai 7, 15 14

    ReplyDelete
  4. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    எதிர் நோக்கிய புதிர் வெளியானதும் மிக்க மகிழ்ச்சி. வழக்கம் போல் கொடுத்த குறிப்புகளை மட்டும் கொண்டு விடை கண்டுள்ளேன். பட அகராதியை நோக்க வில்லை.

    ReplyDelete
  5. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    எங்கள் நேரத்தினை பயனுள்ள முறையில் கழிக்க எடுக்கும் முயற்சி மிகவும் பாராட்டுக்கு உரியது. பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    Nice clues as usual. Keep up the great work.

    ReplyDelete
  7. திரு G.K. சங்கர் அவர்களது கருத்து:

    அருமையான குறிப்புகள். கொறிணி என்ற புதிய சொல்லை அறிந்து கொண்டேன்

    ReplyDelete
  8. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    Another enjoyable crossword with very good clues.
    Congrats & keep it up

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 32 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. மாதவ் மூர்த்தி
    2. பொன்சந்தர்
    3. ராமையா நாராயணன்
    4. K.R.சந்தானம்
    5. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    6. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    7. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    8. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    9. பவளமணி பிரகாசம்
    10. ஸ்ரீதரன் துரைவேலு
    11. சுரேஷ் பாபு
    12. சாந்தி நாராயணன்
    13. G.K.சங்கர்
    14. முத்து சுப்ரமண்யம்
    15. சௌதாமினி சுப்ரமண்யம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete