Sunday, March 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 33


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 33

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. அர்த்த ராத்திரியில் தள்ளாட்டத்தின் மத்தியில் பிச்சை எடு (2,4)

6. ஆவதற்கும் அழிவதற்கும் காரணமாய் இருப்பவள் (2)

7, 2 நெடு: எலும்புவலி நீங்கிவிட்டதால் அமுதவல்லிக்கு ராத்திரி சாந்தி முஹூர்த்தம் (3,3)

8. இரு இடைகள் தாங்கிய ஒரு வள்ளல் அதிரூப சுந்தரன் (5)

11. குதூகலத்தில் மெய்மறந்தேன் நிப்பாட்டு வேலா! நீ பாட்டுப்படி சந்திரா! (2,3)

12, 13 நெடு: இருமுறை தாயத்தில் ஒன்று விழுந்தால் இருமுறை எதிர்பாராத அதிர்ஷ்டம் கிட்டும் (3,3)

14. பஞ்சாமிர்தத்தில் திளைக்கும் கடவுள் (2)

15. பொன்னான குழந்தை இருக்க ஸ்வரங்கள் குறைந்தால் பாதகமப்பா! (3,3)



நெடுக்காக:


1. உயிரை மாற்றி எடுத்த பின் மோட்சம் பெறும் பக்கத்து குடியிருப்பு (4,2)

2. 7 குறு: பார்க்கவும்.

3. ஆதிக்கம் செலுத்தும் நாடு இடித்தது சுவரல்ல (5)

4. நண்பன் தொடர் மாற்றியவன் ஆள் இல்லை. அடியாள் (4)

9. ஸ்வரங்கள் மாறியதும் சலசலப்பு மிகுந்த உற்சாகமாக மாறியது. (6)

10. முருகா! யுத்தம் குறைந்துவிட்டதே! இன்னும் உன் கையில் இருப்பதென்ன? (5)

11. ஐவரது பத்தினி (4)

13. 12 குறு: பார்க்கவும்


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து:

    " A very interesting crossword. "

    ReplyDelete
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    எல்லா குறிப்புகளுமே அருமை.

    ReplyDelete
  3. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    " Another interesting crossword maintaining the high standard that we have come to expect from you. "

    ReplyDelete
  4. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    " குறிப்புகள் மிக அருமை "

    ReplyDelete
  5. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " Very nice clues as usual "

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு அவர்களது கருத்து:

    " very nice. Thanks to your tips "

    ReplyDelete

  7. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " திரை குறுக்கெழுத்துப் புதிர் - 33 ரசித்தவை:

    1நெ, 5, 8, 10, 11கு

    ReplyDelete
  8. திரு பொன்சந்தர் அவர்களது கருத்து:

    " உங்கள் குறிப்புகள் அருமை! விடைகள் தெரிந்தபின் ‘இப்படி யோசிக்காம போயிட்டோமே’ -என்று யோசிக்க வைக்கிறது."

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 33 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. மாதவ் மூர்த்தி
    2. சுரேஷ் பாபு
    3. முத்து சுப்ரமண்யம்
    4. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    5. K.R.சந்தானம்
    6. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
    7. சாந்தி நாராயணன்
    8. சௌதாமினி சுப்ரமண்யம்
    9. பொன்சந்தர்
    10. ராமையா நாராயணன்
    11. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    12. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    13. G.K.சங்கர்
    14. ஸ்ரீதரன் துரைவேலு
    15. பாலாஜி
    16. அந்தோணி இம்மானுவேல்
    17. பவளமணி பிரகாசம்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.

    ReplyDelete