இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.
திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://www.inbaminge.com/t/ சென்று MOVIE INDEX ல் ஆங்கில எழுத்தை தேர்வு செய்து சரிபார்க்கலாம், அல்லது google.com சென்று சரிபார்க்கலாம்.
விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.
|
குறுக்காக:
5. கம்பம் காட்டில் ஜமீன் குதிரைவண்டி இருக்காது. ஒளியால் இரையை கவரும் உயிரினம் இருக்கும் (6)
6. முதன் முதலில் ஹரி லோக்கல் டெலிபோனில் பேசிய சொல் (2)
7. 12 குறு: பார்க்கவும்
8. நிதி மாறினால் நடனத்தில் பிழையை சரி செய்யலாம் (5)
11. விளையாட்டுத்திடல் பற்றிய ஆலாபனையில் கடுகளவு திருடு போனது (5)
12,7 குறு: பெரியம்மாவே தாழ்வாக உருண்டால் ஜீவனமே பொய்யானதாகிவிடும். பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது (3,3)
14. பணம் இல்லாதபோது நிவேதிதா ஒரு படைப்பாளி (2)
15. அன்போடு விலக, மூர்க்கன் வார கடைசியில் வரவில்லை (6) நெடுக்காக:
1. பண்டைய தேசம் ஒன்றில் குந்தி மணாளன் நாட்டியமாட கஷ்டத்தில் சிக்கவில்லை (4,2)
2. கிட்டிப்புள்ளு விளையாட்டில் சூரப்புலி? (3)
3. தங்கமயமான நீர்வீழ்ச்சியில் கர்ணனின் மனைவி? (5)
4. பூமி குலுங்கியது பெரும்பாலும் பூகம்பத்தாலோ ? (4)
9. இந்தப் புதிரின் கரு கொண்ட மொழிச் சித்திரம் (3,3)
10. முழு நிலவுக்கு முந்தைய அரைத் திங்கள் (5)
11. அடிப்படையில் செடி, மரம் இவற்றைத் தாங்கும் அடிப்பகுதி (4)
13. அரைகுறையாய் அட்டூழியம் விளைவிக்கும் இருவர் இசை (3) | ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:
ReplyDeleteரசித்தவை: 12, 7 கு; 7.; 8, 1;
திரு மாதவ் மூர்த்தி அவர்களது கருத்து:
ReplyDelete" Very tough this time. Struggled a lot to find the answers. Still not sure whether all answers are correct. Good quiz. Keep it up "
திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் அவர்களது கருத்து:
ReplyDelete" very challenging / Quite absorbing "
திரு வீ.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:
ReplyDeleteஎல்லா குறிப்புகளுமே அருமை. பணி தொடர வாழ்த்துக்கள்
திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:
ReplyDelete" Very interesting puzzle. "
வணக்கம் நண்பர்களே,
ReplyDeleteதிரை குறுக்கெழுத்துப் புதிர் - 35 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:
1. K.R.சந்தானம்
2. ராமச்சந்திரன் வைத்தியநாதன்
3. பவளமணி பிரகாசம்
4. சுரேஷ் பாபு
5. மாதவ் மூர்த்தி
6. முத்து சுப்ரமண்யம்
7. பொன்சந்தர்
8. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
9. ராமையா நாராயணன்
10. சாந்தி நாராயணன்
11. பாலாஜி
12. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
13. சௌதாமினி சுப்ரமண்யம்
விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.