Sunday, November 20, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 41


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 41

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


5, 3 நெடு, 16 குறு: ஈருலகங்களுக்கு இடையில் உதித்தவளே ! இருபுறமும் நோக்கு பெண்ணே ! (2,3,2)

6. மீண்டும் மீண்டும் மோதிக்கொள்ள, இரு தாதாக்கள் இரு கால் இழந்தனர் (3,3)

7. உள்ளி உள்ளே ஒண்ணும் இல்லே (5)

8. நரிவாலை சுற்றினால் மாடு வெகுமதி பெறும் (3)

10. 14 நெடு: பார்க்கவும்

12. தாய் மண் மீது அரை மயக்கத்தில் அபிராமியின் பூனைகள் (3,2)

15. கசக்கும் வேம்பு அரைகுறையாய் தித்தித்தது பற்றிய சாஸ்திரம் யாரும் அறியாதது (3,3)

16. 5 குறு: பார்க்கவும்


நெடுக்காக:


1. கொடிய நச்சுப்பாம்பு போய்விட்டால் நாடார் ராஜலிங்கம் பிடித்தமானவராகிடுவார் (4)

2. முக்கிய நடிகை, நாகம் தாக்கியதாக உளறுவதில் வேகம் இல்லை (5)

3. 5 குறு: பார்க்கவும்

4. அயோக்கியன் போக்கில் கரிய மீன் கிடைக்காது (4)

9. இளைய அதிகாரி, மன்னனது நரம்பில் இருப்பார். விருப்பமிலா மனதில் இருக்கமாட்டார் (5)

11. கட்டுண்ட உறவு (4)

13. வெப்பம் தாங்காது மலர் சூடும் பெண், சம்பந்தரால் உயிர் பெற்றவள் (4)

14, 10 குறு: மத்தாப்பு நுனியை கோபம் தீர எரிக்கும் சிகரி விளக்கு (3,3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    மிக அருமையான புதிர். மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது.

    ReplyDelete
  2. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    Very nice clues as usual.

    ReplyDelete
  3. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Clues are nice

    ReplyDelete
  4. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    4, 8, 10, 14, 15 - நேரம் பிடித்தன!

    ReplyDelete
  5. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    As always, an interesting and challenging puzzle with a high standard that we have now taken for granted from you.

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 41 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. ராமையா நாராயணன்
    2. சுரேஷ் பாபு
    3. சாந்தி நாராயணன்
    4. பொன்சந்தர்
    5. பவளமணி பிரகாசம்
    6. சௌதாமினி சுப்ரமண்யம்
    7. ஆர்.வைத்தியநாதன்
    8. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    9. G.K. சங்கர்
    10. முத்து சுப்ரமண்யம்
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. ஸ்ரீதரன் துரைவேலு
    13. மாதவ் மூர்த்தி
    14. பாலாஜி

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete