Friday, October 21, 2016

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 40


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 40

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


5. எதிரொலி குறைக்கும் கொறிணி (2)

6. பெரும்பாலும் இரவே காலைக்கடன் சரிவரச்செய்யும் பணியாள் (6)

7. முதல் யுவனை உண்ட மயக்கத்தில் பாம்பு (5)

8, 12 குறு: தாசிமகள் மன்னருக்கு அடி விழுந்த குற்றத்திற்காக அவரது இளைய மகனுக்கு தாரமானாள் (3,5)

10. 13 நெடு: பார்க்கவும்

12. 8 குறு: பார்க்கவும்

15. "ஐராவதம் ஆட்டம்" விளையாட்டுக்கு ஆதரவு அளிக்காது பாண்டவர் ஆடிய விளையாட்டு (6)

16. மலரோடு பிரஜைகள் நடுவில் செய்யும் அர்ச்சனை (2)


நெடுக்காக:


1. மென்பானம் தயாரிக்கப்படும் ராஜஸ்தான் மாநில நகரொன்றில் திரும்பவும் வேலை (4)

2. சேர சோழ பாண்டியர் ( 5)

3, 14 நெடு: அரைகுறையாய் சமனாக்கிய வனத்தை சீராக்கிய காவலர் உடை (3,3)

4. வார முடிவில் சுற்றும் கணவன் கலகம் விளைவிப்பவன் (4)

9. கிராமத்துப் பெண் ஆரம்பத்தில் சிறை சென்றதால் சிவகுமாரும் வருந்தினார் (5)

11. தர்மதேவதை கணவன் உள்ளே பாதி கவசம் அணிந்தவன் (4)

13., 10 குறு: சூடமேற்றிய விளக்கு கற்றாழை மலர் தீர எரியும் (4,3)

14. 3 நெடு: பார்க்கவும் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

4 comments:

  1. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    மிக ரசித்தவை: 6, 7, 8, 12 கு; 3, 4, 14 நெ.

    ReplyDelete
  2. திரு மாதவ் மூர்த்தி அவர்களின் கருத்து:

    Very hard to crack this time

    ReplyDelete
  3. திரு G.K.சங்கர் அவர்களின் கருத்து:

    All clues are very nice and a few are really challenging.

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 40 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பாலாஜி
    2. ராமையா நாராயணன்
    3. முத்து சுப்ரமண்யம்
    4. பொன்சந்தர்
    5. பவளமணி பிரகாசம்
    6. மாதவ் மூர்த்தி
    7. வீ.ஆர். பாலகிருஷ்ணன்
    8. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    9. ஆர்.வைத்தியநாதன்
    10. சாந்தி நாராயணன்
    11. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    12. சௌதாமினி சுப்ரமண்யம்
    13. சுரேஷ் பாபு
    14. G.K. சங்கர்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete