Monday, March 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 45


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 45

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


5. ராமண்ணாவுக்கு சொந்தமான நிலம் (2)

6. சம்பளத்தை பாதியாக குறைத்து தந்தைவழி உறவில் சேர்த்தால் இல்லற வாழ்க்கை கிட்டும் (6)

7. அரைகுறையான உபசரிப்பிலெல்லாம் மயங்கினால் பெரும் மனமகிழ்ச்சியே (5)

8., 16 குறு: இளவரசன், ஒரு அற்பத்தனமான அரசனா? (3,2)

10. புலால் உண்ணாத சமயம் (3)

12. ரத்தினம், சிந்தாமல் அணிய அருகிடம் தேவையில்லை (5)

15. இந்தியரது இல்லம், எந்தவித ஆதரவில்லாமலா 50 சதவீதம் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றது? (3,3)

16. 8 குறு. பார்க்கவும்


நெடுக்காக:


1. கம்பம் அடியில் பாதி மாட்டிய கொக்கி (4)

2. நோபல் பரிசு பெற்ற கவிதைத் தொகுப்பு (5)

3. விளக்கு நெருப்பு இருபக்கங்களிலும் பற்றியெரியும் (3)

4. குப்பி இல்லாது புகட்டியவன் கீழ்த்தரமானவன் (4)

9. அந்த பொருள் குறைந்தால் தராதரம் பெறும் (5)

11. நாகராஜ் கடை அருளில் கிடைத்த ஆயுதம் (4)

13. வட இந்தியருக்கு தென்னிந்தியரெல்லாம் சென்னைவாசிதான் (4)

14. ஆங்கில நாளில் விடுதலை பெற்ற கிருத்தவன் (3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

6 comments:

  1. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    "Nice clues yet again"

    ReplyDelete
  2. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    "As always excellent compilations. Keep it up."

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    " 1,7 and 6 six were challenging "

    ReplyDelete
  4. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    " ரசித்தவை: 1, 14 நெ. "

    ReplyDelete
  5. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " எல்லாக் குறிப்புகளுமே மிக மிக நன்றாக உள்ளன. மிகத் தெளிவாக உள்ளன. "

    ReplyDelete
  6. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 45 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சுரேஷ் பாபு
    2. சாந்தி நாராயணன்
    3. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    4. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    5. மாதவ் மூர்த்தி
    6. ஆர்.வைத்தியநாதன்
    7. பவளமணி பிரகாசம்
    8. முத்து சுப்ரமண்யம்
    9. ராமையா நாராயணன்
    10. பொன்சந்தர்
    11. சௌதாமினி சுப்ரமண்யம்
    12. G.K. சங்கர்
    13. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    14. K.R.சந்தானம்
    15. ஸ்ரீதரன் துரைவேலு
    16. பாலாஜி

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete