Monday, February 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 44


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 44

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.

விடைகளில் ஒன்று ஆங்கிலச்சொல்.


குறுக்காக:


3, 6 குறு: புன்னகை வதனம் சித்தரிக்கும் முறைகள் பெரும்பாலும் முறையற்றவை (4,3)

4. புகலிடம் வர முடியாது போன முருகா! கோவில் பசு மாயமானதே! (6)

6. 3 குறு. பார்க்கவும் (3)

7. தினமும் கொஞ்சம் போராடியும் உள்ளே படைக்கலம் இல்லை (5)

9. ஓடக்காரன் ஒரு சினிமா பைத்தியம்? (5)

10. ஆங்கிலப் பெயரில் சரிபாதி அன்பு (3)

12. அரைகுறையாய் சங்கறுத்தவர் குருட்டு ஈஸ்வர் வாத்தியார் (4,2)

13. வட இந்திய கூட்டத்தை சுற்றி என் முதலாளி (4)


நெடுக்காக:


1. அதிகமான கட்டிடங்களை அவசரமா இடிக்குமாறு ஆள்பவனின் ஆணை (3,4)

2. 11 நெடு. பார்க்கவும்

3. ஐந்தாம் வீட்டில் இருக்கும் நரசிம்மரா சிக்கலில் சிக்கியிருக்கிறார்? (5)

5. பிரியத்தோடு விளையாடும் கபடி ஆட்டம், கால் தடுக்கிடும் சகுனத்தால் பாதியிலேயே கலைந்துவிடும் (3,4)

8. ஆங்கிலேய நகரில் பிறந்தவன் என்பதாலோ ஆங்கிலேய குடிமகன் எனப்படுகிறான்? (5)

11, 2 நெடு: சூரிய ஒளியில் சந்திரன், பெரும் நினைவுகளில் பல மாற்றங்களை உண்டாக்குவான் (3,3)

Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

5 comments:

  1. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    " இம்முறை கொஞ்சம் கடினமாக இருந்தது. "

    ReplyDelete
  2. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    " In general all the clues are excellent. "

    ReplyDelete
  3. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    Excellent clues. Liked 9, 10 and 13 Ac very much.

    ReplyDelete
  4. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து:

    As always excellent compilations.

    ReplyDelete
  5. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 44 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பி யிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சுரேஷ் பாபு
    2. ஆர்.வைத்தியநாதன்
    3. ராமையா நாராயணன்
    4. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    5. K.R.சந்தானம்
    6. மாதவ் மூர்த்தி
    7. பாலாஜி
    8. பொன்சந்தர்
    9. சாந்தி நாராயணன்
    10. G.K. சங்கர்
    11. முத்து சுப்ரமண்யம்
    12. பவளமணி பிரகாசம்
    13. சௌதாமினி சுப்ரமண்யம்
    14. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    15. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete