Sunday, August 20, 2017

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 50


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 50

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


3. பொஞ்சாதி உள்ளே அதே சுமையை இறக்கிவிட்டால் பயப்படாதே (4)

4. தமக்கு இளையவர்களில் மூத்தவனை அழைக்கும் விதம் (3,3)

6. பெருமை குன்றி படுக்கையாக மாறிப்போன உடம்பு (3)

7. தலைவலியின்றி சோடிப்பவன் சமைக்கும் இனிப்பு தின்பண்டம் (5)

9. வருகையை ஏற்று எதிர்கொண்டு உபசரித்தல் (5)

10. 13 குறு. பார்க்கவும்

12. ஒரு மரத்திற்கு ஒப்பிடும் தொடர் வாரிசு (6)

13, 10 குறு: மகளிரின் பாட்டால் மிகவும் மயங்கும் உழைப்பவனின் பிள்ளை (4,3)



நெடுக்காக:


1. ஆட்டுக்கல்லுக்குள் இருக்கும் பாதி அரிசி கோதுமைக்கு சொந்தம் கொண்டாடப் போடப்படும் முழக்கம் (7)

2. அதிக சாதத்தினை செய்து முடித்தல் (3)

3. வியூகத்தில் சிக்கி வீரமரணம் எய்திய விஜயகுமாரன் (5)

5. உலர்ந்த மீன் கண்டம் தயாரிக்க ஒருவகை அடுப்பு உருவாக்க வேண்டும். அதிக அக்னி வேண்டாம் (3,4)

8. குளிருக்கு ஏற்றவாறு நடுங்குபவன் 50% தண்டிக்கப்பட வேண்டியவன் (5)

11. சூறாவளி ஏற்படுகையில் உயிர் இழப்பது ஒருவகையில் இயல்பு (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

15 comments:

  1. 50 வது புதிர் - மைல்கல் எட்டியதையொட்டி திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    தங்கள் நற்பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    குறுக்கெழுத்து மட்டுமல்ல,தங்களது ஏனைய புதிர்களும் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளன .

    மீண்டும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்

    ReplyDelete
  2. 50 வது புதிர் - மைல்கல் எட்டியதையொட்டி திரு ஸ்ரீதரன் துரைவேலு அவர்களது கருத்து:

    உங்கள் பணி மேலும் மேலும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.

    உங்களின் இந்த உழைப்பு எவ்வளவு கடினமானது என்பது, இந்த குறுக்கெழுத்தை பூர்த்தி செய்யும் போது உணர்கிறேன்.

    நன்றி, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. 50 வது புதிர் - மைல்கல் எட்டியதையொட்டி திரு (சௌதாமினி) சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    Our wholehearted appreciations and applause for your pioneering effort. We can say we are your fans. Mr Parthasarathy, who also send solutions here is my close friend and we worked together in Railways. He has compared your clues with that of Mr Vanchinathan and has appreciated that your clues are of the same standard as that of Mr Vanchi. Coming from Parthasarathy, who is a sort of 100% successful crossword solving person, should be a great compliment to you.

    ReplyDelete
  4. 50 வது புதிர் - மைல்கல் எட்டியதையொட்டி திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    Great achievement in publishing 50th thirai kurukkezhuthu puthir. Congratulations and kudos to you. Keep entertaining us please. As usual very nice and thought provoking clues. Very well done.

    ReplyDelete
  5. 50 வது புதிர் - மைல்கல் எட்டியதையொட்டி திரு ஆர்.வைத்தியநாதன் அவர்களது கருத்து:

    arai sadhaththukku paaraattukaL

    ReplyDelete
  6. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    வழக்கம் போல் அருமையான குறிப்புக்கள்! மிக ரசித்தவை: 3 கு, 7

    ReplyDelete
  7. மிகப் பெரிய வாழ்த்துக்கள். உங்களுடைய திரைக்கதம்பம் புதிர்கள் எல்லாமே, எப்பொழுதுமே குறுக்கெழுத்துப் புதிர்களுக்குடைய எல்ல விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பவை, கொஞ்சம் கூட குழப்பமே இல்லாமல், தெளிவான surface reading பொருளுடன் அமைந்தவை. Symmetry என்பதற்கு சரி்சீரமைப்பு என்ற சொல் மிக அருமை. அருமையான முயற்சி முழுப் பாராட்டுக்கள். 50 ம் புதிரில் பகடு = பெருமை ஒரு எனக்குப் புதிய சொல். நன்றி

    ReplyDelete
  8. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    Congratulations for being able to compile the 50th puzzle in this category.

    ReplyDelete
  9. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    50 வது திரைக்கதம்பம் புதிருக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் புதிர்ப்பயணம்.
    சுவாரசியமான புதிர்களை தொடர்ந்து அளிப்பதற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  10. ஒவ்வொரு குறிப்புகளுக்கான உங்கள் மெனக்கெடலை பார்த்து வியந்து நிற்கிறேன். வாழ்த்துகள் & பாராட்டுகள்...

    ReplyDelete
  11. திரு பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன் அவர்களது கருத்து

    As always, excellent crosswords. Keep it up

    ReplyDelete
  12. திரு K.R.சந்தானம் அவர்களது கருத்து

    அரை சதம் அடித்ததற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:

    "குறிப்புக்களை மிகவும் ரசித்தேன்."

    ReplyDelete
  14. திரு மாதவ் மூர்த்தி அவர்களது கருத்து:

    "Congratulations for the 50th crossword. Great effort.
    Wish you to keep entertaining us forever."

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 50 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. சுரேஷ் பாபு
    2. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    3. பவளமணி பிரகாசம்
    4. முத்து சுப்ரமண்யம்
    5. ஆர்.வைத்தியநாதன்
    6. சௌதாமினி சுப்ரமண்யம்
    7. ராமையா நாராயணன்
    8. ஆனந்தி ராகவ்
    9. சாந்தி நாராயணன்
    10. பொன்சந்தர்
    11. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    12. G.K.சங்கர்
    13. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    14. K.R.சந்தானம்
    15. பாலாஜி
    16. கோவிந்தராஜன்
    17. மாதவ் மூர்த்தி

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete