Friday, July 20, 2018

திரை குறுக்கெழுத்துப் புதிர் - 61


திரை குறுக்கெழுத்துப் புதிர் - 61

இந்த குறுக்கெழுத்து புதிரின் விடைகள் அனைத்தும் திரைப்படங்களின் பெயர்களே. ஆனாலும் விடைகளை கண்டுபிடிக்க திரைப்படங்களின் பெயர்கள் அறிந்திருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. விடைகள் திரைப்படங்களின் பெயர்கள் என்பது கூடுதல் குறிப்புகள். அவ்வளவே. புதிரை வழக்கமான குறுக்கெழுத்துப் புதிராக எடுத்துக்கொண்டு விடைகளை கண்டுபிடிக்கலாம்.

திரைப்படங்களின் தலைப்புகளை சரிபார்க்க வேண்டுமெனில் http://google.com சென்று ஆங்கிலத்தில் திரைப்படத்தின் பெயரையும் அத்தோடு tamil movie என்றும் type செய்து சரிபார்க்கலாம்.


குறுக்காக:


3. முதற்கண் பிடிவாதம் பிடிப்பது அநியாயம் (4)

4. மேரிமாதா! 60% தெளிவாய் விவரித்தாய்! (6)

6. தருமம் முழுவதும் கடைபிடிக்கலாம் (3)

7. சிங்காரவல்லி பெரிதும் சிதைத்துள்ளது சங்கரனின் உருவா? (5)

9. கற்பூரத்தில் மூதாட்டி அடைத்து வைக்காத சூழ்ச்சி விளையாட்டு (5)

10. யாகம் முதலில் வேண்டி, இருபக்கங்களிலும் விளக்குகள் திரும்பவும் ஏற்றலாம் (3)

12. முனிவர் வெகுண்டெழுந்தா காடு கொள்ளாது (2,4)

13. லகரங்களில் மரம் வெட்டி தருவதே ஒருவிதத்தில் இறைவனின் திருவிளையாடல் (4)


நெடுக்காக:


1. காலடியில் தவறி பிறந்தாய்! அன்னை அவதரித்தாள்! (2,5)

2. மூன்றாவது இடத்திலிருக்கும் குதிரையில் விஷ்ணு (3)

3. பெரியோரது மார்க்கம் தார் போடாமல் அழிவதாய் யார் உருவாக்கியது? (5)

5. நமக்கு மூத்தவர் என போற்றப்பட்ட கட்சித் தலைவர் (4,3)

8. பள்ளிக்கூடத்தில் ஸ்வரம் சேர்த்து சொல்லிக் கொடுக்கும் இடம் (5)

11.12 குறுக்கில் பாதி கடவுளடா! (3)


Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

9 comments:

  1. திரு பார்த்தசாரதி ஸ்ரீனிவாசன் அவர்களது கருத்து:

    Enjoyed solving the crossword. As always the clues were very nuanced.and thought-provoking.I admire your tenacity particularly since I don't get the mood to restart அபாகு.

    Congrats. Keep it up.

    ReplyDelete
  2. திரு முத்து சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    "மிக ரசித்தவை: 9, 10 கு"

    ReplyDelete
  3. திரு ராமய்யா நாராயணன் அவர்களது கருத்து:

    3ம் 8ம் தெரியவில்லை, மற்றவை கொஞ்சம் கடினமாகவும் ரசிக்கும்படியும் உள்ளன.

    ReplyDelete
  4. திரு நாகராஜன் அப்பிச்சிகவுண்டர் அவர்களது கருத்து:

    " As usual very nice clues. "

    ReplyDelete
  5. திரு சௌதாமினி சுப்ரமண்யம் அவர்களது கருத்து:

    This time very difficult. May be a few solutions wrong. Pl send fresh clues for those wrong.

    ReplyDelete
  6. திரு வீ.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களது கருத்து:

    தங்களின் ஊக்கம் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது.

    ReplyDelete
  7. திரு G.K.சங்கர் அவர்களது கருத்து:

    சுவாரசியமான குறிப்புகள்

    ReplyDelete
  8. திரு கோவிந்தராஜன் அவர்களது கருத்து:

    " அருமை "

    ReplyDelete
  9. வணக்கம் நண்பர்களே,

    திரை குறுக்கெழுத்துப் புதிர் - 61 க்கு பல நண்பர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். விடைகளை அனுப்பியவர்களது பெயர்கள்:

    1. பவளமணி பிரகாசம்
    2. பார்த்தசாரதி ஸ்ரீநிவாசன்
    3. ஆர்.வைத்தியநாதன்
    4. முத்து சுப்ரமண்யம்
    5. ராமையா நாராயணன்
    6. பாலாஜி
    7. நாகராஜன் அப்பிச்சிகவுண்டர்
    8. சுரேஷ் பாபு
    9. ஆனந்தி ராகவ்
    10. சௌதாமினி சுப்ரமண்யம்
    11. மாதவ் மூர்த்தி
    12. பொன்சந்தர்
    13. சாந்தி நாராயணன்
    14. வீ.ஆர்.பாலகிருஷ்ணன்
    15. G.K.சங்கர்
    16. கோவிந்தராஜன்

    விடைகளை அனுப்பிய எல்லா நண்பர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும்.

    ReplyDelete